Flash News :
 
  சினிமா  
  
    
 

நடிகர் ராணாவுக்கு வலது கண் பார்வை எப்படி பறிபோனது...?

 

ஆரம்பம் பாகுபலி படத்தில் நடித்த ராணாவுக்கு வலது கண் பார்வை எப்படி பறிப்போனது என்பது தெரியவந்துள்ளது... By V V Media Crew , Published on May 3, 2017


ஹைதராபாத்; பாகுபலி என்ற பிரமாண்ட படைப்பில் முக்கிய கதாபாத்திரமான மகில்மதியின் கெட்ட ராஜாவாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டு பெற்றுள்ளவர் ராணா.


பாகுபலி படத்திற்காக உடம்பை முரட்டுத் தனமாக ஏற்றி வில்லனாக கம்பீரமாக காட்சியளித்தவர் ராணா.

அவரது வலது கண்ணில் பார்வை இல்லை என்பது தற்போது அறிந்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

தொலைக்காட்சி நிகழ்ச்சி

தெலுங்கு
தொலைக்காட்சி சேனலில் லக்சுமி மஞ்சு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணா தனக்கு வலது கண்ணில் பார்வை இல்லை என்றார் அந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

 

ராணா

பிறவியிலேயே கருவிழியில் குறைபாடு இருந்திருக்கிறது 10 ஆண்டுகளுக்கு முன்பு கண் தானம் பெற்று எனக்கு அறுவை சிகிச்சை நடந்தது ஆனால் அப்படியும் பார்வை கிடைக்கவில்லை என்று ராணா கூறியுள்ளார்.

வலது கண்

அறுவை சிகிச்சைக்கு பிறகும் அவருக்கு வலது கண்ணில் பார்வை இல்லை. வலது கண் மூலம் நிறங்களை மட்டுமே பார்க்க முடியும் மற்றபடி எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார், ராணா.

 

 

எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நான் ஃபிட்டாக நலமாக உள்ளேன் என்பதையும் தயவு செய்து எழுதுங்கள், என ஆங்கில பத்திரிக்கை ஒன்றிம் கூறியுள்ளார் ராணா.