Flash News :
 
  சினிமா விமர்சனம்  
  
    
 

பாகுபலி-2 (The Conclusion)

 

சினிமா துறையினரால் பெரிதும் பாராட்டுக்கு உள்ளாகிய படம்...!


வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய பிரம்மாண்டமான ஒரு கலைஞனின் படைப்பு, S.S. ராஜமௌலி பிறப்பிலே படைப்பாளி கலைஞன் நல்ல ரசிகன் என்று நிரூபித்துவிட்டார் சாதாரண குடி மகனில் இருந்து நாட்டின் பிரதமர் வரை 2 ஆண்டுகள் காத்திருக்க வைத்து அந்த காத்திருப்பை திருப்தியாக பூர்த்தி செய்திருக்கிறார்.

முதல் பாகத்தில் இறுதியில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான்....?
அதை அடுத்தபகுதியில் காணலாம் என்று முடிக்கப்பட்டிருந்தது.

(எதிர்பார்ப்புகள் உலக அளவில்இருந்தாலும் அதை பூர்த்தி செய்ய தனி திறமையும் தைரியமும் வேண்டும். தனி திறமைக்கொண்ட ஒரு பிறவி கலைஞரால் மட்டுமே இதை செய்ய முடியும்).

கதைக்களம்
     முதல் பாகத்தில் இறுதியில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் அதை அடுத்த பகுதியில் காணலாம் என்று முடிக்கப்பட்டிருந்தது.  இந்த பகுதியில் (பாகுபலி-2)ல் அமரேந்திர பாகுபாலியின் வாழ்க்கையும் ல்வால் தேவன் சூழ்ச்சியும் ராஜ மாத சிவகாமி தேவியின் ஆட்சி பிழையையும் சுற்றி அமைத்துள்ளது இந்தப்படம்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

வசனங்கள்
அனைத்து வசனங்களும் படத்திற்கு பக்க பலமாக அமைத்திருக்கிறது,
 முக்கியமாக:
"பெண் மீது கை வைத்தவனின் விரலையா வெட்டுவது தலையை வெட்ட வேண்டும்", என்று ஆக்ரோஷமாக தலையை வெட்டுவது.

"நீர் என்னுடன் இருக்கும் வரை என்னை கொல்லும் ஆண் மகன் இன்னும் பிறக்கவில்லை மாமா", என்று கட்டப்பாவை பெருமை படுத்தும் வசனங்களும் திரை அரங்கில் விசில் சத்தம் ஒலிக்கும் தருணங்கள்.

 

 

தொழில்நுட்பம்
        படம் முழுக்க தொழில்நுட்பக் கலைஞர்களின் ஆதிக்கம் தான், அவர்களின் உழைப்பு நிகரற்றது பார்ப்போரை பல முறை பார்க்கத்தூண்டும் கட்சிகளின் வடிவமைப்பு
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் நம்மை பழங்காலத்திற்கு அழைத்து செல்லும் மாயம் ஏற்படுகிறது. தோற்றத்தில் ஏதும் குறையில்லை, மீம்ஸ் போடுபவர்கள் கூட இந்த படத்தை வைத்து நல்ல விதத்தில் மீம்ஸ் போடும் அளவிற்கு தொழில்நுட்பம் அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் K.K. செந்தில் குமார் மற்றும் படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேச ராவ் முயற்ச்சிக்கு பாராட்டுகள்.

ஹாலிவுட் படத்தை மிஞ்சிய இந்தியப் படமாக மாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

 

 

இந்திய திரையுலக சாதனை 
        S.S. ராஜமௌலியின் இந்த படைப்பு திரையுலக வரலாற்றில் யாரும் செய்திட சாதனை என்றே கூறலாம். முதல் வசூல் 100 கோடியை தொட்ட முதல் இந்தியப்படம் என்று பெருமை கிடைத்துள்ளது இயக்குனரின் உழைப்பிற்கும் அவர் குழுவின் உழைப்பிற்கும் கிடைத்த ஆரவாரமான வெற்றி.

 

 

கதையின் நீதி

"கொடியவனின் பேச்சை விட, நல்லவனின் மௌனம் ஆபத்தானது".