Flash News :
 
  சிறுகதை  
  
    
 

போகும் பாதை தூரம் இல்லை....

 


கணேசா சீக்கிரம் புறப்படு.....
நேரம் ஆச்சு என்று சொல்லிவிட்டு முருகன் பயணசீட்டை எல்லாம் சரிபார்த்து கொண்டார் எப்போதும் சரியாக காலை 7  மணிக்கு புறப்படும் பேருந்து இன்று சற்று தாமதமாக புறப்பட நேர்ந்தது காரணம் கணேசன்.

கணேசனும் முருகனும் 7  ஆண்டுகளாக ஒன்றாக பணிபுரிகிறார்கள் நெருங்கிய நண்பர்கள் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டால் சொல்லி விடுவார் கணேசன்
இன்றும் வீட்டில் ஏற்பட்டதை முருகனிடம் சொல்லியதால் சற்று தாமதமாக புறப்பட நேர்ந்தது

என்னதான் மனக்கசப்பு இருந்தாலும் பேருந்து ஓட்டும் போது அதை பற்றி சிந்திக்க மாட்டார் கணேசன்
பேருந்து புறப்பட்டது....

பேருந்து புறப்படும் போது அதிகம் கூட்டம் இருக்காது பின் மூச்சு காற்று கூட போக வழி இருக்காது
கணேசன் முருகன் இருவரும் காலை உணவை ஹோட்டலில் தான் சாப்பிடுவார்கள் வண்டி சிறிது நேரம் ஹோட்டலில் தான் நிற்க்கும் முருகன் பார்சலை வாங்கி விட்டு விசில் பாசையில் புறப்படலாம் என்று சொல்வார்

வண்டி போக போக கூட்டம் அதிகமாகிக்கொண்டே போகும் பயணிகளுக்கும் முருகனுக்கும் சில நேரங்களில் பல வாக்குவாதங்கள் நடைப்பெறும்
பயணிகள் சில்லறை இல்லாமல் ஏறுவதால் கோபம் ஆகி விடுவார் நிற்க கூட இடம் இல்லை என்று அறிந்தும் குழந்தைகளுடன் பேருந்தில் ஏறுவார்கள் பெண்கள்
 
எங்கிருந்துதான் வருவார்களோ தெரியாது காலையிலையே குடித்து விட்டு குடிபோதையில் தள்ளாடும் காட்டு மிராண்டிகள் இதை எல்லாம் சமாளிப்பதிற்குள் உயிர் போகிவிடும் இவற்றை கூட சமாளித்து விடலாம் கணேசன் படும்பாடு இருக்கே...
எதிரே வருபவர்கள் தெரிந்து கொண்டு தான் வண்டி ஓட்டுகிறார்களா என்ற எண்ணம் வந்து விடும்
L BOARD போட்டு ஓட்டுங்களேண்டா என்று சிலரிடம் சண்டையும் பிடிப்பார்.
சாப்பாடும் தண்ணீரும் அருகருகே இருந்தும் சாப்பிட நேரம் இருக்காது இவற்றை எல்லாம் கடந்து பஸ்ஸ்டாண்டிற்கு செல்லும் எறும்பிற்கு இருக்கும் அறிவு கூட எருமை மாடு போல் இருக்கும் மனிதர்களுக்கு இருக்காது
படியில் முந்தி கொண்டு ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பார்கள்
ஐந்து நிமிட இடைவேளை அதற்குள் சாப்பிட்டு விட வேண்டும் இல்லையென்றால் அடுத்து வண்டி வந்துவிடும்
பார்வையற்றவர்கள் பார்வைப்  பெற்றது போல் இருக்கும். இருவருக்கும் பேருந்து மறுபடியும் புறப்பட்டது பயணிகளை ஏற்றிக்கொண்டு....
கணேசனுக்கு எதற்காக இந்த பணியை தேர்ந்தெடுத்தோம் விட்டு விடலாம் என்று கூட தோன்றும் சில நேரங்களில் உடனே அவர் திரும்பி பயணிகளை பார்ப்பார் இத்தனை உயிர்க்கும் தன் பொறுப்பில் இருப்பதை நினைத்துக்கொண்டு உற்சாகமாக ஓட்ட ஆரம்பித்து விடுவார்
நேரம் சரியாக 8.30  ஆனது
பாக்கியம் பஸ்ஸை தவறவிடாமல் வந்து விடுவாள் இன்று சற்று தாமதம் ஆனதால் ஓடி வர நேர்ந்தது நல்லவேளை பஸ்ஸை பிடித்துவிட்டாள்
பாக்கியம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறாள்
முருகன், என்னமா இன்னைக்கு LATE ஆகிருச்சா?
ஆமா.. நா... அப்பாவுக்கு சமையல் செஞ்சுட்டு வரகொஞ்சம் LATE ஆகிருச்சு

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

தினமும் அதே பேருந்தில் வருவதால் முருகன், பாக்கியத்தை நன்கு அறிவார்
பேருந்தில் பயணிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தீர்த்துவைப்பாள்

பேருந்தில் ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நின்று பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்றது
கணேசனுக்கு அவ்வப்போது தனது மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது வண்டி ஓட்டுவதால் அழைப்பை கணேசன் எடுக்கவில்லை
பயணசீட்டை எல்லாம் கொடுத்துவிட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்தார் முருகன்
கணேசனுக்கு தனது மனைவியிடமிருந்து அழைப்பு   வந்து கொண்டே இருந்தது இதை கவனித்த முருகன் கணேசன் தன்னிடம் கூறியதை பற்றி சிந்திக்க தொடங்கினார்

கணேசனுக்கு கடன் கொடுத்தவர் வட்டி பணத்தை கேட்டு நச்சரிக்கிறாராம். என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பியது முருகன் கண் முன் தோன்றியது
பாக்கியம் தனது ஸ்டாப்பில் இறங்கினாள்

காலையும் மாலையும் தவறாமல் இந்த பேருந்தில் தான் பயணம் செய்வாள் பேருந்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்க தயங்க மாட்டாள்
இப்படிதான் ஒருமுறை பஸ்ஸில் பயணம் செய்யும் இருவர் அரசியல் அசிங்கத்தை பேசி வந்தார்கள்
நமது கட்சியே பெரியது என்று பேசியவர்களுக்கு பாக்கியம் சரியான பாடம் கற்று கொடுத்தாள்
விவசாயிகளின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாத உங்க கட்சி சிறந்தது தான் என்றாள்
இருவரும் மறுபேச்சு பேசவில்லை.

தனது பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுப்பாள் சிறந்த மதிப்பெண் பெற்றால் பரிசளிக்க தவறமாட்டாள்
அம்மாவை இழந்தவள் அனைவரிடமும் அன்பாக பழகுவாள்
முதல் சவாரியை முடித்த நிலையில் பேருந்து டெப்போவிற்கு சென்றது இனி மாலை4 மணிக்கு தான் பேருந்து புறப்படும் அதுவரையில் ஓய்வு எடுத்து கொள்வார்கள் இருவரும். மதிய சாப்பாட்டை முடித்து விட்டு மற்ற டிரைவர் கண்டெக்டர்களுடன் பேசி கொண்டு இருந்தனர்.

முருகனுக்கு அழைப்பு வரவும் அவர் வெளியே சென்று விட்டார் கணேசனுக்கு தன் மனைவி குழந்தைகள் பற்றிய கவலை ஏற்ப்பட தொடங்கியது அப்படியே யோசித்து கொண்டே தூங்கி விட்டார் முருகனும் சிறிது நேரம் ஓய்வு எடுத்து கொண்டார்
மாலை4 மணிக்கு வண்டி புறப்பட தயாராக இருந்தது பள்ளி விடும் நேரம் என்பதால் மாணவர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் பேருந்து கூட்டமாக இருப்பதால் பிச்சை எடுப்பவர்களுக்கு வசதியாக போய்விடும்.

தனது இயலாமையே கூறி பிச்சை எடுப்பார்கள் உடல் ஊனம் காது கேட்காது கண் தெரியதென்று செல்பவர்களுக்கு மனம் இருப்பவர்கள் மனதார பணம் கொடுப்பார்கள்
ஆனால் ஊனம் எல்லாம் பேருந்தில் இருந்து இறங்கியதும் இடம் தெரியாமல் போய்விடும்
பசியுடம் வரும் மாணவர்களுக்கு ஏற்ப பல தின்பண்டங்கள் பேருந்தினுள் விற்கப்படும்
கணேசன் வண்டியை ஓட்ட ஆரம்பிக்கும் முன் கடவுளிடம் வேண்டிக்கொண்டு ஓட்ட ஆரமித்தார்.

பள்ளி குழந்தைகளின் சத்தம் ஒரு புறம் இளையராஜாவின் இசை மழை ஒருபுறம் இசையுடன் இயற்கையின் காற்றுடனும் வண்டி ஓட்டும் சுகமே தனி என்பார் கணேசன்
முருகனுக்கு மாலையில் ஓடும் சவாரி சவாலாகவே இருக்கும் படியில் நிற்காதே என்று படித்து படித்து கூறினாலும் மண்டையில் ஏற்றி கொள்ள மாட்டார்கள் சில முட்டாள்கள்
இதனாலே என்னவோ முருகனுக்கு மாலை சவாரி பிடிக்காமலே போய்விட்டது ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது பாக்கியம் பஸ்ஸிற்காக காத்திருந்தாள் பஸ் வந்ததும் ஏறிக்கொண்டாள் ஒவ்வொரு ஸ்டாப்பிலும் பயணிகள் ஏறவும் இறங்கவுமாக இருந்தார்கள்.

மாணவர்கள் கூட்டம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது எப்போதும் தனது ஸ்டாப்பில் இறங்கும் பாக்கியம் இன்று இறங்கவில்லை பாதி கூட்டம் குறைந்து விட்டது
என்னம்மா பாக்கியம் இன்னைக்கு உன் ஸ்டாப்ல இறங்காம இவ்ளோ தூரம் வந்துருக்க என்று கணேசன் கேட்டார்
ஆமாங்கண்ணா இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு பாக்கியம் பதில் அளித்தார்.

அனைவரும் இறங்கிவிட்டார்கள் எங்கம்மா போகணும் என்று கணேசன் கேட்டார்
பாக்கியம் மெளனமாக தனது பையில் இருந்து 15,000(பதினைந்தாயிரத்தை) எடுத்து கணேசனிடம் நீட்டினாள் கணேசனுக்கு எதுவும் புரியவில்லை
என்னமா இது என்று புரியாமல் கேட்டார் பாக்கியம் எதுவும் சொல்லாமல் மெளனமாக இருக்க.

இன்று மதியம் பாக்கியம் எனக்கு போன் செய்தால் நீ ஏதோ சிரமத்தில் இருக்கிறாய் என்று உன் முகத்தை பார்த்து தெரிந்து கொண்டதாக என்னிடம் கூறினாள்
நானும் உனது பிரச்சனையை பாக்கியத்திடம் கூறினேன் என்றார் முருகன்
கணேசனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை மெளனமாக பாக்கியத்தை பார்த்தார்
எனக்கு நேரம் ஆகிவிட்டது நான் கிளம்புகிறேன் என்றாள் பாக்கியம்
ரொம்ப நன்றிமா என்று இருக்கை கூப்பி நன்றி தெரிவித்தார் இதற்கு எதற்காக நன்றி எல்லாம் சொல்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு சரிங்கண்ணா காலை சீக்கிரமாக பள்ளிக்கு புறப்பட வேண்டும் என்று இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினாள் பாக்கியம்
கணேசன் வீட்டிற்கு சென்றவுடன் தன் மனைவியுடன் நடந்ததை சொன்னார்
கணேசனின் மனைவிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை மகிழ்ச்சியில் இரவு சாப்பாட்டை முடித்து விட்டு தூங்குவதற்கு சென்றார்
தூக்கம் தூரத்தில் நின்று கொண்டு கணேசனிடம் வர மறுத்தது

பாக்கியம் செய்த உதவியை நினைத்துக்கொண்டே இருந்தார் கண்ணின் ஓரம் கண்ணீர் துளிகளோடு அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டார்.

 அடுத்த நாள் 7  மணிக்கு வழக்கம் போல் பயணம் தொடர்ந்தது......