Flash News :
 
  அரசியல்  
  
    
 

புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்- நரேந்திர மோடி

 

மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம் முதல் மந்திரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி வேண்டுகோள்


முன்பிருந்த திட்ட க் கமிஷன் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் கவுன்சிலை மத்திய அரசு அமைத்துள்ளது இதன் தலைவராக பிரதமரும், உறுப்பினர்களாக அணைத்து மாநில முதல் மந்திரிகளும் உள்ளனர் இந்தநிலையில் மாநில முதல் மந்திரியாகளும் கலந்து கொண்ட நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது அப்போது நாட்டின் 15ஆண்டு பொருளாதாரத்தின் மீதான தொலை நோக்கு பார்வை குறித்து ஆலோசிக்கப்பட்டது.  


இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

      நிதி ஆயோக் 15 ஆண்டு கால தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது . இதில் 7 ஆண்டுகள் நடுத்தர யுக்திகளை கொண்டது . 3 ஆண்டுகள் வளர்ச்சியை துரிதப்படுத்துவதாக அமையும்.  புதிய இந்தியாவை அமைக்கும் லட்சியம் கூட்டு முயற்சி இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும். எனவே இதற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உலகின் போக்கிற்கு ஏற்ப நாட்டை தயார்படுத்துவரதற்கான வழிமுறைகளை இங்கே கூடி இருக்கும் இந்திய குழு எதிரொலிக்கும். நாட்டின் 75-வது சுதந்திர தின வருடமான 2022-ம் ஆண்டுக்குள் நாட்டை விரைவான வளர்ச்சிப் பாதைக்கு முன்னெடுத்து செல்ல வேண்டும். அடிப்படை கட்டமைப்புகளான சாலைகள், துறைமுகம், மின்சக்தி, ரயில்வே ஆகிய துறைகளில் வளர்ச்சி இல்லாதது நாட்டின் பொருளாதார முன்னற்றத்துக்கு தடையாக இருக்கிறது. எனவே கட்டமைப்பு வளர்ச்சியை மாநில அரசுகள் முடுக்கிவிட வேண்டும். இதற்காக மூலதன செலவினங்களை வேகப்படுத்தி கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

மம்தா கெஜ்ரிவால் புறக்கணிப்பு:

  
                கூட்டத்தில் பா. ஜனதா ஆளும் மாநில முதல் முதல்- மந்திரிகள் மற்றும் எதிர்கட்சிகளை சேர்ந்த முதல் மந்திரிகள் அமரிந்தர் சிங் (பஞ்சாப்) நிதிஷ்குமார் (பீகார்) மாணிக் சர்க்கார் (திரிபுரா) சித்தராமைய்யா (கர்நாடகா) எடப்பாடி பழனிசாமி (தமிழ்நாடு) நவீன் பட்நாயக் (ஒடிசா) ஆகியோர் பங்கேற்றனர். 

மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சுரேஷ் பிரபு, பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிரிதி இரானி, ராவ் இந்தி ரஜித் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

முதல் மந்திரிகள் மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்) கெஜ்ரிவால் (டெல்லி) முகுல் சங்மா(மேகாலயா) ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர் இவர்கள் தங்களுடைய பிரதிநிதிகளை அனுப்பி வைத்து இருந்தனர்.