Flash News :
 
  சினிமா  
  
    
 

அப்பாவின் மீசை

 

ரோகிணியின் புதிய அனுபவங்கள்


நடிகை ரோகிணி குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமானவர் 100 -க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்"அப்பாவின் மீசை" என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார். திரையுலகில் பல வருடம் வெற்றிகரமாக பயணித்த இவர் தற்போது டைரக்க்ஷன் துறையில் தனது அனுபவங்களை பகிர்த்திடுகிறார். 

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

ஒரு புதிய படம் இயக்கவேண்டும் என்று யோசித்த போது ஒரு பத்திரிகையில் படித்த செய்தி நினைவுக்கு வந்தது பதிமூன்று வயது சிறுவன் பல நாட்களாக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் புனே ரெயில் நிலையத்தில் தொலைத்து போகிறது. அந்த சிறுவன் அங்கேயே நம்பிக்கையுடன் தங்கியிருந்து தனது பணத்தை கண்டுபுடிக்கிறான் அந்த பதிமூன்று வயது சிறுவனின் பொறுமை என்னை கவர்ந்தது அதுவே டைரக்ட் செய்ய தூண்டியது.

 

 

எல்லோரும் அம்மாவை பற்றி நிறைய பேசி விட்டோம் அம்மாவுக்கு நிகர் யாரும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் எடுக்கும் முடிவு அப்பா சொல்லி தந்த அறிவுரைப்படிதான் இருக்கும் அதை இந்த படத்தின் மூலம் கூறியிருக்கிறேன்.

 

 

13 வயது பையன் வேடத்துக்கு குத்துப்பட்டறைக்கு சென்று ஒரு சிறுவனை தேர்வு செய்தேன் அப்பா கதாபாத்திரத்தில் பசுபதி நடித்து இருக்கிறார் பையனுக்கு உதவி செய்யும் சுனந்தா என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நித்தியமேனன் நடித்துள்ளார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் நடித்து இருக்கிறார்.

 

 

இந்த படம் மனித உறவுகளின் உன்னதத்தை பற்றி கூறுகிறது நாம் எவ்வளவு தான் ஓடினாலும் கடைசியில் வந்து நிற்பது அன்புதான் என்பதையும் அன்பு இல்லாததால் தான் பாலியல் பிரச்சனைகள் எழுகிறது என்பதையும் கதை சித்திரிக்கிறது.