Flash News :
 
  அரசியல்  
  
    
 

அரசியல் நாகரீகம் காரணமாக சந்திப்பதில் தவறில்லை - வைகோ

 


Published by : Kiruthiga                                                       Updated : Thursday, 30 November 2017     5 : 30 PM 


கோவை : திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் தம்பி மகள் வித்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்ததை அடுத்து கோவையில் ஜி.வி ரெசிடென்சியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று வித்யாவின் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் திமுக செயல் தலைவர் மு ஸ்டாலின்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

மேலும் கடந்த மாதம் விபத்தில் பலியான சின்னியம்பாளையத்தை சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளர் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை வருவதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்த திமுக செயல் தலைவர் மு ஸ்டாலினிடம் மதிமுக செயலர் வைகோ சந்தித்து பேசினார்.

 

 

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ அரசியல் நாகரீகம் காரணமாக சந்திப்பதில் தவறில்லை என்றும் ஆர்கே இடைத்தேர்தல் குறித்து நாங்கள் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.