Flash News :
 
  செய்திகள்  
  
    
 

கன்னியாகுமரியிலிருந்து விலகி செல்ல தொடங்கும் ஓகி புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்

 


Published by : Vivek Thiyagarajan                                            Updated : Thursday, 30 November 2017    6:02 PM


சென்னை : கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று காலை முதல் ஓகி புயலாக மாறியதால் கன்னியாகுமரி உட்பட தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இதனை தொடர்ந்து கன்யாகுமரியில் பலத்த காற்றால் ஐநூறுக்கு மேற்பட்ட மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்கு நிறுத்த பட்டுள்ளது.

 

 

ஓகி புயலால் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தஞ்சை, தூத்துக்குடி, திருவாரூர், நாகை புதுக்கோட்டை மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

 

இதனை அடுத்து தற்போது கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ஓகி புயல் கன்னியாகுமரியிலிருந்து தென் மேற்கு திசையில் 70 கிலோ மீட்டருக்கு நகர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.