Flash News :
 
  செய்திகள்  
  
    
 

மேட்டூர் அணை திறப்பு, விவசாயிகள் மகிழ்ச்சி

 


மேட்டூர் அணை திறப்பு மற்றும் சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவித்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தார் P.R. பாண்டியன்.

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளாக காவிரி தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயம் தொடர்ந்து பதிக்கப்பட்டு வருகிறது.


 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

 

 

இந்நிலையில் இவ்வாண்டு தென்மேற்கு பருவ மழை காலம் கடந்து பெய்வதால் கர்நாடகம் உபரி நீரை திறந்து விடுவதால் மேட்டூர் ஆணை நிரம்பி வழிவதை அறிந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குறுகிய கால பயிர் ரகங்களை பயன்படுத்தி ஒரு போக சம்பா சாகுபடி செய்து பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பதுத்தபட்டுள்ளது.

 

 

விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று அக்டோபர் 2ல் மேட்டூர் அணை திறந்திடவும் சம்பா தொகுப்பு திட்டம் அறிவித்து அனுமதி வழங்கியுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், வேளாண்துறை மற்றும் பொதுபணித்துறை உயர் அலுவலர்க்கும் விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 

அவ்வப்போது விவசாயிகள் கருத்தினை அறிந்து தண்ணீர் திறப்பையும் , பாசனத்தையும் முறைப்படுத்த வேண்டும்.
 
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த முடிந்தவரையில் சேமித்து வைத்தால் அடுத்த ஆண்டு முன் கூட்டியே தண்ணீர் திறக்க வாய்ப்புண்டு. என்றார்            P.R. பாண்டியன்