Flash News :
 
  சினிமா  
  
    
 

வாழ்க்கை பற்றி கூறிய சஞ்சய் தத்

 


Published by : Vivek Thiyagarajan                                                  Updated : Sunday, 17 September 2017   4:35 PM


டெல்லி : போதைப்பொருள், ஆயுதம், பெண்கள் போன்ற சர்ச்சைகளில் சிக்கியவர் சஞ்சய் தத் பாலிவுட் நடிகரான இவர் 3 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்ததாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியுள்ளார்.மேலும் அவர் தனது வாழ்க்கையும் பற்றி பேசியுள்ளார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

நான் ஒரு காலத்தில் ஒரே நேரத்தில் 3 பெண்களை காதலித்தேன். ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவரை காதலித்தேன். யாரிடமும் சிக்காமல் தப்பிப்பது தான் புத்திசாலித்தனம் கல்லூரியில் படித்தபோது போதைப் பொருள் பழக்கம் ஏற்பட்டது.பின்னர் போதைக்கு அடிமையாகிவிட்டேன். அதில் இருந்து வெளிவர எனக்கு 10 ஆண்டுகள் ஆனது. தயவு செய்து யாரும் போதைப் பொருட்களை பயன்படுத்தாதீர்கள்.

 

 

என் மகன் என்னை போன்று ஆகிவிடக் கூடாது என்பதே என் பிரார்த்தனை. என்னால் என் தந்தை பட்ட கஷ்டங்களை நான் பட விரும்பவில்லை. என் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுத்து வளர்க்கிறேன்.என் தந்தை எங்களை சாதாரண குழந்தைகளை போன்றே வளர்த்தார். நான் போர்டிங் ஸ்கூலுக்கு சென்றேன். என் பிள்ளைகளும் அதே போன்று செல்கிறார்கள் என்று சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.