Flash News :
 
  செய்திகள்  
  
    
 

பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 


Published by : Vivek Thiyagarajan                                          Updated : Sunday, 17 September 2017   12:09 PM


சென்னை : இன்று தந்தை பெரியாரின் 139-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து கட்சி தலைவர்கள் சென்னையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் முதல்வர் பன்னீர் செல்வம் அமைச்சர்கள் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகுத்தறிவு தந்தை, பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் 139-வது பிறந்தநாள். திராவிட இயக்கத்தின் தந்தையை வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.சென்னையில் அண்ணாசாலையின் ஜெமினி பாலத்திற்கு கீழே உள்ள பெரியாரின் சிலைக்கு அருகே உள்ள உருவ படத்திற்கு கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதுமட்டுமின்றி தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பெரியாரின் உருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.