Flash News :
 
  சினிமா  
  
    
 

மலையாள படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் கவர்ச்சி நடிகை சோனா

 


Published by : Vivek Thiyagarajan                                  Updated : Monday, 9 September 2017   8:02 AM 


சென்னை : பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ள சோனா சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர் தயாரிப்பாளர் எஸ் பி சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்த சோனா கொஞ்ச நாள் சினிமாவின் பக்கம் வரவில்லை. அதுமட்டுமன்றி நமீதா தன்னை பாராட்டவில்லை எனப் பேட்டிகளில் சொல்லிய சோனவை நமீதா கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

பத்துக்கு பத்து குரு என் ஆளு, குசேலன், கோ உள்பட பல கவர்ச்சி வேடங்களில் நடித்த சோனா ஜெய் நடிப்பில் கனிமொழி என்ற படத்தை சொந்தமாக தயாரித்தும் உள்ளார்.அதுமட்டுமின்றி இவர் மலையாள படங்களில் பிரபலமானவர்.இவர் சில வருடங்களாக சினிமாவில் தலைக் காட்டாமல் இருந்தார் தற்போது அவரது எடையை ஏழு கிலோ குறைத்துக் கொண்டு தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாக இருக்கும் படத்தில் நடித்து வருகிறார் சில வருடங்களுக்கு முன் சினிமாவை விட்டு விலகிய இவர் காவி புடவையை உடுத்திக் கொண்டு ஆன்மிக வடிவில் மாறியது மட்டுமின்றி தனது பெயரையும் தேவி சோனா என்று மாற்றி கொண்டதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

 

 

மேலும் இவர் ஆண்கள் டிஸ்யூ பேப்பரைப் போல தேவைகள் நிறைவேறிய பின் தூக்கி எறிந்திட வேண்டும் என இவர் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் ஆண்கள் சங்கம் சோனாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தற்போது இவர் போலீசாக நடித்து வருகிறார் போலீசாக நடிப்பது இதுவே முதல் முறை கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படமாகவும் இப்படத்தை புது இயக்குனர் இயக்கி இருக்கிறார் இதற்காக சோனா சண்டை பயிற்சிகளையும் கற்றுவருகிறாராம்.