Flash News :
 
  செய்திகள்  
  
    
 

பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார் - தாயார் அற்புதம்மாள்

 


Published by : Vivek Thiyagarajan                                               Updated : Friday, 25 August 2017    1:10 PM


ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் அவரது வீட்டிற்கு 27ஆண்டுகளுக்குப் பின் பரோலில் வந்துள்ளார் அவருக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார் இதையடுத்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திடீர்னு வந்துட்டதால சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இந்த மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

ஒரு மாத கால பரோல் முடிவதற்குள் விடுதலை என்ற செய்தி வந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இந்த நேரத்தில் அனைவருக்கும் நன்றி சொல்ல நான் விரும்புகிறேன். நானும், என் கணவரும் நோயாளிகள் தான் ஆனால் என் மகனை பார்த்துமே உடலுக்கு தெம்பு வந்தது போல இருக்கிறது. என்றாலும் இனி தான் மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை கேட்க வேண்டும், என் மகனுக்கும் உடல்நிலையை பரிசோதனை செய்ய வேண்டும். வந்த பரபரப்பில் இருக்கிறோம், இன்னும் அந்த பரபரப்பு எனக்கு அடங்கவில்லை.

 

 

27 வருடங்களாக போராடுகிறேன் இரண்டு முறை ஜெயலலிதாவினால் விடுமுறை என்று சொல்லி தடைபட்டது. அதற்குப் பிறகு ஒவ்வொரு முறையும் இதோ வந்துவிடுவார், அதோ வந்துவிடுவார் என்று சொன்னார்கள். ஆனால் 27 வருடம் ஓடிவிட்டது. அதனால் தான் நேற்று கூட நான் சொன்னேன், என் மகன் வீட்டில் காலடி எடுத்து வைத்தால் தான் நம்புவேன் என்று அவன் வந்த பிறகு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

 

 

என் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டேன், பேரப்பிள்ளைகளையும் பார்த்துவிட்டேன். ஆனால் என் ஒரே மகன் வாழ்க்கையை வாழவில்லை என்பது கஷ்டமாக இருக்கிறது. இனி வரும் கால சூழலை பொறுத்து அடுத்த கட்ட ஏற்பாடுகளை செய்ய நான் திட்டமிட்டுள்ளேன் என்று அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.