Flash News :
 
  செய்திகள்  
  
    
 

20 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலை

 


Published by : Vivek Thiyagarajan                                            Updated : Tuesday, 22 August 2017       1:30  PM 


கரூர் : கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரை சேர்ந்தவர் சரவணன். இவர் சிவ பக்தர் ஆவார் பிரதோஷதினத்தன்று அவர் கனவு கண்டுள்ளார். அக்கனவில் இறைவன் தோன்றி அவருடைய ஊரின் ஒரு பகுதியில் 20 அடி ஆழத்தில் சிவ ஆலயம் இருப்பதாக கூறியதாக அவர் ஊர் மக்களிடம் கூறியுள்ளார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இதையடுத்து ஊர் மக்கள் அவரை நம்பி பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அவ்விடத்தை தோண்டிய போது சிவன் சிலையும், நந்தி சிலையும் கண்டெடுக்கப்பட்டது. இச்சிலைகளை எவ்வித சேதாரமும் இல்லாமல் எடுத்த பின்பு தாசில்தாருக்கும் மற்றும் மற்ற அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து தாசில்தார் தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அதுமட்டுமின்றி அங்குள்ள பொதுமக்கள் திருக்காம்புலியூர் ஊரில் வைத்து கோவில் கட்டி தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.