Flash News :
 
  செய்திகள்  
  
    
 

ஊழலை ஒழிப்பேன் என்ற மோடி ஊழல் அணிகளை ஒன்றாகியுள்ளார் - ஸ்டாலின் பேச்சு

 


Published by : Vivek Thiyagarajan                                              Updated : Tuesday, 22 August 2017    1:20 PM


சென்னை : சுதந்திரத்தினத்தில் ஊழலுக்கு எதிராக வீர உரையாற்றினார் பிரதமர் மோடி இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இரு ஊழல் அணிகள் ஒன்றிணைய துணை நின்றுள்ளார் மோடி. ஊழலை ஒழிப்பேன் என்ற மோடி ஊழல் அணிகளை ஒன்றாக்கியுள்ளார் என்பதை வைத்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அதிமுகவின் எம்.எல் ஏக்கள் மட்டுமல்லாமல் கருணாஸ், அன்சாரி, தனியரசு ஆகியோரும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. முன்பு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக பி எஸ் கடிதம் அளித்த போதே சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

 

 

எனவே தமிழக சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் திமுக உரிய முடிவை எடுக்கும் இவ்வாறு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கு பின் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார் அதுமட்டுமின்றி பன்னீர்செல்வதை போனில் அழைத்து வாழ்ந்திருந்தார்.