Flash News :
 
  உலக செய்திகள்  
  
    
 

வடகொரியாவுக்கு மிரட்டல் விடும் டிரம்ப்

 


Published by : Vivek Thiyagarajan                                           Updated : Friday, 11 August 2017   9:09 PM 


வாஷிங்டன் : வடகொரியா அமெரிக்காவுக்கு ஏவுகணையை ஏவுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா மீது வடகொரியா தாக்குதல் நடத்தினால் அடையாளமே தெரியாத அளவுக்கு மிக கடுமையாக பதிலடியை நாங்கள் பரிசாக தருவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியாவை எச்சரித்துள்ளார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

மேலும் இந்த மிரட்டல் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு தாக்குதல் பலமாக இருக்கும் என்பதை வடகொரியாவும் அதன் தலைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

 

 

மேலும் வடகொரியா தங்கள் நிலப்பரப்பில் தாக்குதல் நடத்தினால் உடனடியாக அது பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் தங்களது ராணுவம் முழு தயார் நிலையில் உள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டில் ராணுவம் தற்போது ஒரு அளவில் தயாராக உள்ளது ஆயுதங்கள் லோட் செய்யப்பட்ட நிலையில் தயாராக உள்ளன கிம் ஜாங் உன் புத்திசாலித்தனமாக செயல்படுவது அவருக்கு நல்லது.

 

 

எங்களது பாதையில் கிம் குறுக்கிடாமல் இருப்பார் என நம்புகிறேன் அப்படி இல்லாவிட்டால் வரலாறு காணாத நஷ்டத்தை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என டிரம்ப் மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி வடகொரியா தலைவர் கிம் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது யார் என்ன சொன்னாலும் அது கேட்பதில்லை என பேச ஆரம்பித்துள்ளார்.

 

 

வடகொரியா அமெரிக்காவின் குவாம் தீவை குறிவைத்துள்ள நிலையில் குவாம் தீவுகளைத் தாக்குவோம் மொத்த அமெரிக்காவும் எங்களது விரலுக்குக் கீழ்தான் என்றும் கிம் கூறி வருகிறார் இதையடுத்து டிரம்ப் பதில் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.