Flash News :
 
  செய்திகள்  
  
    
 

தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தால் முதல்வர் எடப்பாடி பதவி பறிபோய்விடும் - டிடிவி தினகரன்

 


Published by : Vivek Thiyagarajan                                               Updated : Thursday, 10 August 2017     4:06 PM 


தஞ்சாவூர் : டிடிவி தினகரனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கியது குறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேசியுள்ளார். அதில் எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி தினகரன் மிரட்டல் விடுத்து பேசியுள்ளார் அதில் பேசியதாவது

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது அதிமுகவின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அந்த உத்தரவானது இன்று வரை பின்பற்ற வேண்டும். அதுதான் விதி.ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறியுள்ளனர். அதிமுக அம்மா என்ற லெட்டர் பேடுக்கு பதிலாக அதிமுக என்ற லெட்டர் பேடில் இன்று எனக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி அதிலும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.

 

 

தேர்தல் ஆணையத்தின் விதிகள் கூட தெரியாமல் அவசர கோலத்தில் எனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அதிமுக லெட்டர் பேடை பயன்படுத்தியுள்ளனர். மேலும் இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்திலும் என்னை துணை பொதுச் செயலாளர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

 

 

இந்த தேர்தல் ஆணைய விதிமுறை மீறல் குறித்து யாரேனும் புகார் அளித்தால் முதல்வரின் பதவி பறிபோகும். அதுமட்டுமல்லாது, தீர்மானத்தில் கையெழுத்திட்ட அனைவரின் பதவிகளும் பறிபோகும்.மடியில் கனம் இருப்பவர்கள்தான் இப்படி முடிவெடுத்துள்ளனர்.இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறேன். இவ்வாறு தினகரன் கூறினார்.