Flash News :
 
  செய்திகள்  
  
    
 

இரயில் நிலையங்களில் செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு

 


Published by : Vivek Thiyagarajan                                                    Updated : Monday, 31 July 2017  5:45 PM


நெல்லை : தற்போது நவீன மயமாகி வரும் உலகில் இளைஞர்கள் உட்பட சிறியவர்கள் அனைவரும் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.செல்பி எடுப்பதினால் பல எதிர்பாராத விளைவுகள் நிகழ்கின்றன வாட்ஸ் அப், பேஸ் புக் போன்றவைகளில் புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்ள இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இதனால் செல்பியின் தாக்கம் அதிகமாகிவிட்டது. இளைஞர்கள் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பது ஓடும் ரயிலில் செல்பி எடுப்பது போன்றவற்றில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். செல்பியின் மோகம் அதிகரித்துக் கொண்டே போவதால் கூட்டம் கூட்டமாக நின்று செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க நெல்லை உள்ளிட்ட இரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர், நடை மேடை போன்ற இடங்களில் செல்பி எடுப்போரை உடனடியாக பிடித்து ரயில்வே போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

 

 

இரயில்களில் ஆபத்துக்குரியபடி செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அங்கு செல்பி எடுக்காமல் இருக்க போலீசார் போடப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் ரயில் நிலையங்களில் தேவையில்லாமல் புகைப்படம் எடுப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது.