Flash News :
 
  செய்திகள்  
  
    
 

தம்பியின் பிரிவை தாங்க முடியாமல் அக்கா மரணம்

 


Published by : Vivek Thiyagarajan                                                Updated : Saturday, 29 July 2017     11:04 AM 


ஆத்தூர் : ஆத்தூரை சேர்ந்த நரசிங்கபுரம் 2-வது வார்டு அன்னை கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் கந்தன்.60 வயதான இவர் தனது மனைவி பழனியம்மாளுடன் வசித்து வந்தார்.இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இதில் ஏற்கனவே 2 மகன்கள் இறந்து விட்டனர். ஒரே மகளுக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர்.60 வயதாகும் இவருக்கு கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இவரது உடல் நிலையை காண அவரது உறவினர்கள் மற்றும் அவரது அக்கா பழனியம்மாள் ஆகியோர் வியாழக்கிழமை அன்று அதிகாலை வந்தடைந்தனர்.

 

 

பழனியம்மாளுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன.உறவினர்களை கண்ட சிறிது நேரத்தில் கந்தன் உயிர் பிரிந்தது. இவரது பிரிவு துயரை ஆற்ற முடியாமல் கந்தனின் அக்கா கதறி அழுது மயங்கி விழுந்தார். பின் சிறிது நேரத்தில் பாலையம்மாளின் உயிரும் பிரிந்தது. இது அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் 60 வயதை கடந்த பின்னரும் அவர்களது பாசம் அனைவரிடமும் வியப்பில் ஆழ்த்தியது.