Flash News :
 
  அரசியல்  
  
    
 

பாஜக திட்டமிட்டுத் தீட்டிய சதி சீமான் பேச்சு

 


Published by : Vivek Thiyagarajan                                                         Updated : Friday, 28 July 2017     4.39  PM


சேலம் : அஸ்தம்பட்டி மணல்க்காட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொது கூட்டம் நடைப்பெற்றது. அதில் சீமான் பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் சீமான் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது என புகார் எழுந்தது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

அதுமட்டுமின்றி சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆளும் பாஜக திட்டமிட்டு தீட்டிய சதி என்றும் வன்முறையைத் தூண்டினேனா என கேள்வி எழுப்பியும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது.

 

 

 மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த மீனவர்களின் பிரச்சனையை கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் பேசி வருகிறேன். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் நெய்தல் படை அமைத்து மீனவர்களை பாதுகாப்போம் என்று கூறி வருகிறேன்.இந்த நெய்தல் படையில் மீனவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கையில் துப்பாக்கியைக் கொடுப்போம் என்று பல கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன் அப்போதெல்லாம் என் மீது பாயாத வழக்கு இப்போது பாய்ந்துள்ளது.

 

 

நான் மத்திய அரசை விமர்சித்துத் தொடர்ந்து பொது கூட்டங்களில் பேசி வருகின்றேன்.அதனால் தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு என்னைக் குறித்து சதி திட்டம் தீட்டி வருகிறது. என்னை கைது செய்யவும் தூண்டி வருகிறது.என்னை எப்படியாவது சிறையில் அடைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்று சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.