Flash News :
 
  அரசியல்  
  
    
 

எடப்பாடிக்கு தொடர்ந்து பெருகும் ஆதரவு... வலுவிழக்கிறது ஓ.பி.எஸ் அணி...

 


Published by : Vivek Thiyagarajan                                                    Updated : Sunday, July 23,2017     03:42 PM

சென்னை : ஜெயலலிதா மறைவிற்க்கு பின் இரு அணிகளாக உடைந்துள்ள அதிமுக அணிகளில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மற்றும் ஒரு பலமாக  .பி.எஸ் அணியில் இருந்த எம்எல்ஏ ஆறுக்குட்டி இணைந்துள்ளார் இதனால் ஓ.பி.எஸ் அணியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

சசிகலாவுடனான மோதலையடுத்து பன்னீர்செல்வம் தனியாக பிரிந்து வந்து கட்சி தொடங்க நினைத்தபோது முதல் நபராக ஆதரவு கரம் நீட்டியவர்தான் ஆறுக்குட்டி. படிப்படியாக 12 எம்எல்ஏக்கள் .பி.எஸ் அணி பக்கம் வந்தனர். அமைச்சராக இருந்த பாண்டியராஜனும்கூட பதவி போனாலும் பரவாயில்லை என நினைத்து பன்னீர்செல்வம் பக்கம் பாய்ந்து வந்தார். இதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்த எம்எல்ஏக்கள் அனைவரையும் பன்னிர்செல்வம் பக்கம் வர முக்கிய காரணம் ஓபி எஸ் அணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஆதரவு உள்ளது என்பதனால்தான். மேலும் எதிர்த்தவர்கள் வீட்டில் நடந்த அடுத்தடுத்த அனல்பறக்கும் ஐடி ரைடுகளால் மேலும் ஆதரவு பெருகியது.

இந்நிலையில் புதிதாக பதவியேற்ற இடப்படிபழனிச்சாமி சுதாரிப்புடன் செயல்பட்டு .பி.எஸ் ஐவிட அதிக எம்எல்ஏக்கள் தன் வசமுள்ளதை காட்டி பாஜக ஆதரவை பெற்று செயல்பட தொடங்கியது. இப்போது கூட பாருங்கள், அதிமுக அரசை யாராவது குறை சொன்னால் எடப்பாடிக்கு முன்பே தமிழிசைதான் அதை கண்டிப்பார். அத்தனை நெருக்கமாக உள்ளது இக்கூட்டணி.

 

 

தொடர்ந்து ஆதரவு குறைந்து வருவதால் தற்போது ஓ.பி.எஸ் அணிக்கு வலுகுறைந்து அணி நீடிக்குமா என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது இருக்கும் எம்எல்ஏக்கள் இதைப்போலவே சென்றுவிட்டால் ஓ.பி.எஸ் அணிக்கு மொத்தபலமும் இல்லாமல் போய்விடும் என்பதால் என்ன செய்வது என குழப்பத்தில் உள்ளது ஓ.பி.எஸ் அணி.