Flash News :
 
  செய்திகள்  
  
    
 

ஓஎன்ஜிசி போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன்

 


Published by : Vivek Thiyagarajan                                                    Updated : Sunday, July 23,2017     01:17 PM

தஞ்சை : ஓஎன்ஜிசி திட்டத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட கதிராமங்கலம் மக்கள் நடத்திய போராட்டத்தில் கைதான பத்து நபர்களின் ஒருவரான பேராசிரியர் ஜெயராமனின் தந்தை மரணமடைந்த காரணத்தால் அவருக்கு இடைக்கால ஜாமீனை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த திட்டத்தால் கதிராமங்கலத்தில் கடந்த 31ம்தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால் பதற்றமடைந்த கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்ததோடு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களுக்கு வரும் 28ஆம் தேதி வரை போலீஸ் காவல் நீடிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கதிராமங்கலம் மக்கள் போராடி வந்தனர்.

இதற்கிடையே ஜெயராமனின் தந்தை தங்கவேலு நேற்று மயிலாடுதுறையில் காலமானார். இதனால் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இன்று மனுதாக்கல் செய்தனர்.அதை அவசர வழக்காக நீதிபதி நிஷா பானு விசாரணை நடத்தினார். அப்போது ஜெயராமனுக்கு வரும் 26ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.