Flash News :
 
  சினிமா விமர்சனம்  
  
    
 

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்

 


Published by : Vivek Thiyagarajan                                                 Updated : Saturday, 15, July  2017    5:09 PM 


ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
இயக்குனர்    :  ஓடம் இளவரசு
தயாரிப்பாளர்  : T.சிவா
நடிகர்கள்      : அதர்வா, சூரி, மொட்டை ராஜேந்திரன்
நடிகைகள்     : ரெஜினா, பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி.
படத்தொகுப்பு  : பிரவீன் K.L.
இசை         : D.இமான்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஒரு ஜாலியான காதல் கதை தான் இந்த படம்
ஒருத்தன் பல பொண்ண காதலிக்கிறதும், அதுல வர பஞ்சாயத்தை சமாளிக்கிறதையும் சுத்தி தான் இந்த கதையே நகருது.

படத்தோட துவக்கம் சிறிது தொய்வோட இருந்தாலும் அடுத்தடுத்த கட்டங்கள் விறுவிறுப்பு கூட்டியிருக்கு.இதுல ஜெமினிகணேசனா அதர்வாவும் சுருளி ராஜனா சூரியும் நடிச்சிருக்கது ரசிக்கிற விதத்துல இருக்கு.

என்னதான் சூரி நகைச்சுவைய அள்ளி தெளிச்சிருந்தாலும் கம்பெனிக்கு இன்னொருத்தர் இருந்துருக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துது.

 

 

படத்துல வர ஹீரோயின்னும் அவங்க கதாபாத்திரத்த சரியா பண்ணிருக்காங்க அதுலயும் ரெஜினாவின் நடிப்பு கவனத்தை ஈர்க்குது.அதர்வா நடிப்பின் இன்னொரு பரிணாமமா இந்தப்படம் இருக்கு.

மகன் காதலிக்கிறானு தெரிஞ்சிருந்தும் கண்டிக்காத அப்பாவின் காதாபாத்திரம் தப்போ என்கிற கேள்வியை உண்டாக்குது.இளைஞர்கள தப்பான பாதையில கொண்டுபோறமாதிரியான கதையமைப்பு என்னதான் கதையில அதுக்கு ஒரு காரணம் சொன்னாலும் சில விஷயங்கள் ஏற்புடையதா இல்ல.

 

 

இசையமைப்பாளர் இமானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது.சில படங்கள்ல நல்ல நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கான சரியான கதா பாத்திரத்தை தருவதில்லை.அதேபோல இந்த படத்திலும் வில்லன் நகைச்சுவை என பல பரிணாமங்களில் கலக்கும் மொட்டை ராஜேந்திரனுக்கு சரியான கதாபாத்திரத்தை தரலனுதான் சொல்லனும்.

படத்துல பெரிய புதுமைகள் எதுவும் இல்லைனாலும் பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்கு படமா இது இருக்கும்.முயற்சிகள் அதிகளவுல இல்லனாலும் தேவையில்லாத சீன்ஸ்ஸ தவிர்த்திருந்த படம் முழுமையடைஞ்சிருக்கும்.