Flash News :
 
  உலக செய்திகள்  
  
    
 

ஐநாவை மிரட்டும் வகையில் பேசிய வடகொரியா வெளியுறவுத் துறை அமைச்சர்

 


Published by : Vivek Thiyagarajan                                                Updated : Saturday, July 15,2017      10:09 AM 


சியோல் : வடகொரியா அணு ஆயுத சோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை இவற்றை நடத்த மும்மரம் காட்டி வருகிறது.இதையடுத்து உலக நாடுகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் அணு ஆயுத சோதனையில் பின்வாங்காமல் உள்ளது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

மேலும் வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை தடுக்க அந்நாட்டு மீது தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இவ்வாறு தடைகளை விதித்தால் எதிர் நடவடிக்கை எடுக்கப்படும் என வடகொரியா மிரட்டியுள்ளது.மேலும் அணு ஆயுத சோதனை நடத்தி அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளையும் மிரட்டி வருவதால் அந்நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

 

 

இந்நிலையில் ஆயுத சோதனை குறித்து வட கொரியாவின் வெளியுறவு அமைச்சர் விளக்கம் அளித்ததாவது அமெரிக்காவின் அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளளவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதித்ததாகவும் தங்களின் நாட்டை பாதுகாத்துக் கொள்வது என்பது வடகொரியாவின் சட்டப்பூர்வ உரிமை என்றும் ஐநா வடகொரியா மீது தடைகளை விதித்தால் எதிர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

 

 

இதனையடுத்து அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் பயிற்சியில் 

ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து வடகொரியாவுடன்
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில் ஐநாவை மிரட்டும் வகையில் வடகொரியாவின் வெளியுறவுத்துறை
அமைச்சர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.