Flash News :
 
  உலக செய்திகள்  
  
    
 

சென்னையைப்போல் பல மடங்கு பெரிதான பனிப்பாறை உடைந்தது...!!!

 


Published by : Vivek Thiyagarajan                                                Updated : Thursday, July 13,2017   2:17 PM


பாரிஸ்உலகின் மிகப்பெரிய பனி பிரதேசங்களில் ஒன்றாகவும் ஐந்தாவது மிகப்பெரிய கண்டமாகவும் திகழக்கூடிய அண்டார்டிகாவில் சென்னையை போன்ற 13 மடங்கு அளவுள்ள பனிப்பாறை உடைந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமியின் தென்துருவ முனையை சூழ்ந்து அண்டார்டிகா கண்டம் அமைந்துள்ளது. புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூர்யவெப்பம் மிகக் குறைந்த அளவே கிடைப்பதோடு வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே சூரியனின் வெளிச்சம் கிடைக்கிறது.இது பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி என்பதால் இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது. வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்வுக் கூடங்கள் மட்டுமே இங்கு செயல்பட்டு வருகிறது. மேலும் இக்கண்டம் முழுவதும் பனிக்கட்டியல் மூடப்பட்டு இருப்பதால் வெண்ணிற போர்வைபோல் காட்சியளிக்கிறது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்நிலையில், மேற்கு அண்டார்டிகாவில் அமைந்துள்ள லார்சன் சி பனியடுக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிளவால், பனிப்பாறை ஒன்று பிரிந்து சென்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து விரிசல் ஏற்பட்டுக்கொண்டிருந்த நிலையில், பனிப்பாறையானது முழுவதுமாக உடைந்து பிரிந்துவிட்டது என நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. சுமார் 5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட இந்த பனிப்பாறை சென்னையை போன்று 13 மடங்கு பெரியதாகும். பனிப்பாறை உடைந்து சென்றதையடுத்து இதனால் ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதா என்றும் ஆராய்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
 

 

 

கடந்த 1995 மற்றும் 2002-ல் அண்டார்ட்டிக்காவின் வடக்கில் உள்ள பனியடுக்கான லார்சன் மற்றும் லார்சன் பி பகுதிகளில் இதுபோன்ற பனித் தகர்வுகள் ஏற்பட்டதால் அவை முற்றிலுமாக நொறுங்கிப் போயின. அதே போன்று இப்போது இந்த பனிப்பாறை உடைந்துள்ளது இதனால் உடனடியாக கடல்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு இல்லை எனினும் எதிர்காலத்தில் இதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

உடைந்து மிதந்து கொண்டிருக்கும் பனிப்பாறையை பலகாலமாக ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் ஆய்வாளர்கள் கண்காணித்து வந்துள்ளனர். இதுவரை  பிரிந்து வந்த மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றான இதற்கு 68 என்று பெயரிடப்பட்டுள்ளது. பனிப்பாறை பிரிந்து விட்டதால் லார்சின் சி எனும் பனி அடுக்கில் 12 சதவீத பரப்பு குறைந்திருக்கிறது.