Flash News :
 
  சினிமா  
  
    
 

இழுத்து மூடும் நிலையில் தியேட்டர் தொழில்

 


Published by : Vivek Thiyagarajan                                           Updated : Wednesday, July 7,2017     6:04 PM


தமிழகத்தில் GST வரியை எதிர்த்து தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழக அரசுடன் சினிமா சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்தையில் சமூக உடன்பாடு ஏற்பட்டநிலையில் இன்று தியேட்டர்கள் திறக்கப்பட்டது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில் பிரச்சனைக்கு தீர்வு கண்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தது மட்டுமின்றி அவர் சொல்லாமல் மறைத்த விஷயம் தியேட்டரை மூடிட்டா அரசாங்கம் பயந்திருமா உங்களால் என்ன செய்ய முடியும் நேர்மையான கணக்கு உங்களிடம் இருக்கிறதா என அமைச்சர்கள் சினிமா சங்க பிரதிநிதிகளை அவமானப்படுத்தியதை, இனியும் திரையரங்குகளை திறக்கவில்லை என்றால் வேறு மாதிரியான பிரச்சனைகள் தனக்கு தொழில் ரீதியாக வரும் என்பதால் மந்திரிகள் சொன்னதை ஒப்புக்கொண்டு தியேட்டரை திறப்பதாக அபிராமி ராமநாதன் அறிவித்துவிட்டார்.

 

 

கேளிக்கை வரியை ரத்து செய்வதாகவும் GST வரியை டிக்கெட் கட்டணத்துடன் வசூலித்து கொள்ளுங்கள் என்றும் இது குறித்து குழு அமைத்து விவாதித்து வரியை தீர்மானிக்கலாம் என அரசு தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டதாக அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கான எழுத்து பூர்வமான ஆவணங்கள் அரசு வழங்கவில்லை. தியேட்டர் கட்டணங்களிலிருந்து GST வரி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதால் டிக்கெட் கட்டணத்திலிருந்து GST வரி பணத்தையும் வசூலிக்க தியேட்டர்கள் தொடங்கிவிட்டன.புறநகர் பகுதிகளில் 30,50 க்கு அரசு கட்டணம் நிர்ணயித்திருந்தது.

 

 

ஆனால் பொதுவாக 100க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.GST வரியையும் சேர்த்து 118 ஆக டிக்கெட் விற்பனை செய்யப்படும் போது பார்வையாளர்கள் பெரும்பாலானோர் தியேட்டர்க்கு வர மாட்டார்கள்.50 ரூபாய்க்கு மட்டுமே அரசுக்கு வரி கட்டும் தியேட்டர் நிர்வாகம் வரி ஏய்ப்பு தொடரும். இந்நிலையில் பாதிக்கப்பட போவது படம் பார்க்கவரும் பொதுமக்களும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தான்.

 

 

மேலும் தியேட்டர் தொழிலை கட்டுப்பாட்டில் மிரட்டி கொண்டுவந்த அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரியை 30% சதவீதம் என்று சட்டமன்றத்தில் சட்டமாக்கி விட்டது தமிழக அரசு. இதையடுத்து தியேட்டர் கேன்டீனில் சட்டத்திற்கு புறம்பாக உணவு பொருட்களின் விலையை நான்கு மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து விஷால் விழித்தெழுந்து அரசுடன் போராடி டிக்கெட் கட்டணத்தையும் உணவு பொருட்களின் விலையும் சரியாக முறைப்படுத்த வேண்டிய பணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு உள்ளது.