Flash News :
 
  உலக செய்திகள்  
  
    
 

சிக்கிமை காரணம்காட்டி இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை..!!

 


Published by : Vivek Thiyagarajan                                                       Updated : Thursday, July 6,2017     5:39 PM


பெய்ஜிங் :  இந்தியா எல்லையில் படைகளை திரும்ப பெறாவிட்டால் சிக்கிமை தனி நாடாக பிரிப்போம் என சீனா அரசு ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பூடான் மற்றும் சிக்கிமில் இந்தியாவிற்கு எதிரான இயக்கங்கள் உருவாகும் என்றும் இந்தியாவிற்கு இது எதிர்மறையாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சீன பத்திரிக்கை எச்சரித்துள்ளது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்தியா பூடான் சீனா போன்ற நாடுகள் ஒன்றாக இணையும் இடமான டோக்லாம் பகுதியை கைபற்ற தொடர்ந்து எல்லையில் அத்துமீறும் சீனாவை இந்திய ராணுவம் தடுத்து வருகிறது. இதனால் கோபமடைந்துள்ள சீனா தமது படைகளை குவித்துள்ளது. அதற்க்கு பதிலாக இந்திய ராணுவமும் தனது  படைகளை குவித்துள்ளதால் இந்திய சீனா எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. 

 

 

இந்நிலையில் சீனாவின் அரசு மீடியாக்கள் தொடர்ந்து பிரச்சனையை தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. அண்மையில் ட்ரம்பை மகிழ்ச்சிப்படுத்தவே இந்தியா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகவும், இந்தியா எல்லையில் உள்ள தன்னுடைய ராணுவத்தை திரும்பபெறவில்லை என்றால் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிக்க போவதாகவும், அதற்காக சீனா தன்னுடைய நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்துய்யபோவதாகவும் 2003-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் போது சிக்கிம்மை இந்தியாவின் ஒரு மாநிலமாக எற்றுக் கொண்டதை சீனா மறு பரிசீலனை செய்யப்போவதாகவும் சீன அரசு மீடியா தெரிவித்துள்ளது.

 

 

சிக்கிம் தனிநாடு என்ற எண்ணம் கொண்டவர்கள் உள்ளனர், சிக்கிம் விவகாரத்தில் உலக நாடுகளின் பார்வை எப்படியிருக்கும் என உணர்ச்சிப்பூர்வமாக உள்ளனர் என்றும் சுதந்திர சிக்கிம் என்பதற்கு சீனா சமூதாயத்திலும் ஆதரவு உள்ளது என்றும் சீனா இந்தியாவை எச்சரித்துள்ளது.இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் தற்போது சீனா பல்வேறு சூசகமான நிகழ்வுகளை அரங்கேற்றி வருகிறது அதில் ஒன்றுதான் தற்போது சீன அரசு மீடியா வெளியிட்டுள்ள இந்த சிக்கிம் தனிநாடு விவகாரம்.