Flash News :
 
  உலக செய்திகள்  
  
    
 

புலிகளின் ஆயுத கப்பல்களை இலங்கைக்குக் காட்டி கொடுத்தது நாங்கள்தான் - அமெரிக்கா ஒப்புதல் வாக்குமூலம்

 


Published by : Vivek Thiyagarajan                                               Updated : Monday, July 3,2017      6:08 PM 


வாஷிங்டன் : தமிழீழத்துக்கான இறுதி யுத்தம் நடைபெற்றது. அதில் விடுதலை புலிகளின் ஆயுத கப்பல்கள் பல நாடுகளின் தகவலினால் புலிகளின் ஆயுத கப்பல்கள் இலங்கை கடற்படையினால் அழிந்தது.2006 ம் ஆண்டு முதல் 2009 வரையில் ஆயுத கப்பல்கள் விடுதலை புலிகளின் கைகளுக்கு செல்லாதவாறு பல நாடுகளும் போட்டியிட்டுக் கொண்டு இலங்கைக்கு சேவை செய்து வந்துள்ளது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்நிலையில் இப்போது நாங்களே புலிகளின் ஆயுத கப்பல்களை காட்டி கொடுத்தோம் என ஒப்புக் கொண்டுள்ளது அமெரிக்கா. இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ராபர்ட் பிளேக் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

 

 

அதில் அப்போது விடுதலை புலிகளின் ஆயுதக் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழிக்க வில்லை எனவும் ஆனால் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பான தகவல்களை இலங்கைக்கு காட்டிக் கொடுத்தோம் இலங்கை தான் அந்த கப்பல்களை தாக்கி அழித்தது என கூறி அமெரிக்கா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது.