Flash News :
 
  அரசியல்  
  
    
 

அதிமுகவின் கட்சி போட்டியில் இணையும் இளவரசியின் வாரிசு...

 


Published by : Vivek Thiyagarajan                                                       Updated : Monday, July 3,2017     4:13 PM


சென்னை : ஜெயலலிதா மறைவிற்குப்பின் அதிமுக கட்சியும் அவருடைய சொத்துக்களும் சசிகலாவிடம் வந்ததற்குப்பின் பல்வேறு பிரச்சனைகளும், பாகுபாடுகளும் ஏற்பட்டு ஒருபுறம் ஓபிஸ், மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமி என இரு வேறு அணிகளாக பிரிந்து அதிமுக கட்சியை பெற போட்டியிட்டுக் கொண்டிருக்கும் தருவாயில் சசிகலா குடும்பத்தினரும் அரசியலில் நுழைய பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

சசிகலாவை அடுத்து அரசியலுக்கு வரத்துடிக்கும் தினகரன் மகன் ஜெயானத்திற்கு போட்டியாக இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியா அரசியலுக்கு வருவதற்கான முதற்கட்ட செயலாக வலைதளங்களில் சில பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
ஓபிஸ் கட்சியை விட்டு விலகிய நிலையில் சசிகலா, தினகரன், ஜெயானந்தன், கிருஷ்ணப்பிரியா என ஒரே குடும்பத்தை சேர்ந்த பலரும் அதிமுக அணியையும் போயஸ் கார்டனையும் குறிவைத்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. ஜெயலலிதாவின் அருகாமையிலேயே கிருஷ்ணபிரியா வளர்ந்ததால் அவருடைய செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவரைப் போலவே உடை தோற்றம் என அனைத்தையும் மாற்றிக்கொண்டார்.

 

 

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சசிகலா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் சசிகலாவின் சகோதரர் மகன் ஜெயானந்த் தான் அரசியலுக்கு வரப்போவதாக வெளியிட்ட தகவல்களுக்கு போட்டியாக தற்போது சசிகலாவின் அண்ணன் மகள் அதாவது இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியா சமீபத்தில் "அளவிற்கு அதிகமான அமைதி நிறைந்திருக்கும் இடத்தில் அளவிற்கு அதிகமான வீரமும் நிறைந்திருக்கும் என்பதை சிலசமயம் வெளிக்காட்டித்தான் ஆக வேண்டியிருக்கிறது" என்று ஒரு பதிவை எச்சரிக்கையாக விட்டுள்ளார். மேலும் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் "வம்புக்கு போகவேண்டியதில்லைதான் ஆனால் வரும் வம்பையும் விடவேண்டியதில்லை" என்று கூறியிருக்கிறார்.  

 

 

அரசியலுக்கு வரப்போவதையே கிருஷ்ணப்பிரியா எச்சரிக்கை பாணியில் பதிவுகளை வெளியிட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அதிமுக அணியையும் போயஸ் கார்டனையும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சசிகலா குடும்பத்தினரால் அரசியலில் ஏற்படும் திருப்பம் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.