Flash News :
 
  சினிமா  
  
    
 

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பில் நடிக்க நீண்ட ஆசை பட்டேன் - ஸ்ரீதேவி

 


Published by : Vivek Thiyagarajan                                                  Updated : Thursday, June 22,2017    5:04 PM


சென்னை : தமிழ் திரையுலகில் கொடிக் கட்டி பறந்த கதாநாயகியான ஸ்ரீதேவி மாம் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாக இருக்கும் மாம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் ஸ்ரீதேவி, போனே கபூர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதேவி மற்றும் போனே கபூர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஊடகங்களுக்கு நடிகை ஸ்ரீதேவி பேட்டி அளித்தார். அதில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பில் பணி புரிவது தனது நீண்ட நாள் ஆசை என்றும் அது இந்த திரைப்படத்தில் நிறைவேறியது என்றும் கூறினார். இதற்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்ற பாகுபலி படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க அழைத்ததற்கு மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

அதனால் பத்திரிகையாளர் ஒருவர் பாகுபலி படத்தில் நடிக்க மறுத்ததற்கு காரணம் கேட்டுள்ளார். அதற்க்கு நடிகை ஸ்ரீதேவி மழுப்பலாக பதில் அளித்தார். அதுமட்டுமன்றி தமிழில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தனது மகளுக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிறைவேற்றுவேன் எனவும் கூறினார். மேலும் அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழில் பேட்டி அளித்திருந்தது மிக சிறப்பாக அமைந்திருந்தது.