Flash News :
 
  விளையாட்டு செய்திகள்  
  
    
 

அவுட் ஆக காரணமான ஜடேஜாவை ட்விட்டில் விமர்சனம் செய்த ஹர்திக் பாண்ட்யா

 


Published by : Vivek Thiyagarajan                                                         Updated : Monday, June 19, 2017 3:09 PM

சென்னை : இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 339 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி பயணித்தது ஆனால் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஜமான் சதம் அடித்த போதிலும் ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே பும்ராவின் நோபாலில் அவுட் ஆனதால் தப்பினார் இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கின் போது அனைத்து பேட்ஸ்மேங்களும் சொதப்பியபோதும் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக ஆடி இந்தியாவிற்கு நம்பிக்கை கொடுத்தார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்த வேகத்தில் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் ஹர்திக்பாண்ட்யா 

43 பந்துகளில் 6 சிக்சர்கள் உதவியோடு 76 ரன்கள் குவித்துக் கொண்டிருந்தநேரத்தில் ஜடேஜா 
மோசமாக பாண்ட்யா ரன் அவுட்க்கு காரணமாகினார். அதாவதுஓடுவது போல முன்வந்து
விட்டு பிறகு திரும்பி ஓடிவிட்டார் ஜடேஜா. இதனால்பாண்ட்யா அவுட் ஆகிவிட்டார்.

 

 

இதுகுறித்து விவிஎஸ். லட்சுமணன் கருத்து தெரிவிக்கையில் தான் ஜடேஜா இடத்தில்

இருந்திருந்தால் பாண்ட்யாவுக்காக விக்கெட்டை தியாகம் செய்திருப்பேன் எனகூறினார். 
இதனால் பாண்ட்யா உட்பட பிரபலங்கள் பலரும் ஜடேஜா செயலுக்குகண்டனம் தெரிவித்து 
வந்த நிலையில் பாண்ட்யாவும் நேற்று அவுட் ஆகி மைதானத்தைவிட்டு வெளியேறுகையில் 
முகத்தில் கோபத்தை வெளிக்காட்டியிருந்தார். இதனால்டிவிட்டரில் ஜடேஜாவை 
கடுமையாக விமர்சனம் செய்து பாண்ட்யா டிவிட்போட்டிருந்தார்.

 

 

அதில் நம்மில் ஒருவராலேயே நாம் கொள்ளையடிக்கப்பட்டோம் பிறகு அடுத்தவர்களைகுறை 

சொல்லி என்ன பயன் என்று பொருள் படும் வகையில் ஹிந்தியில் கூறியிருந்தார்.ஆனால் 
இந்த டிவிட் இந்திய அணிக்குள் பிளவு இருப்பதை போல காட்டுவதாகநெட்டிசன்கள் கருத்து 
தெரிவித்த நிலையில் டிவிட்டை டெலிட் செய்து விட்டார்இருப்பினும் அதன் ஸ்கிரீன் 
ஷாட்டுகள் நெட்டில் உலவிக்கொண்டிருக்கின்றன.