Flash News :
 
  அரசியல்  
  
    
 

நாளை சட்டசபை கூட்டம் கூடுகிறது உச்சகட்ட பதற்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி

 


Published by : Vivek Thiyagarajan                                               Updated : Tuesday, June 13,2017    11:03 AM


சென்னை :  நாளை 14-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் மொத்தம் 24 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் மானியக் கோரிக்கைகளை பற்றி விவாதிக்க தமிழக சட்டசபைக் கூட்டம் கூடுகிறது இந்த கூட்டத்தில் அனைத்துத்துறைகளுக்குமான மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 4வது முறையாக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்நிலையில் திமுகவில் எம்எல் க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் ஆளுங்கட்சி எம்எல் ஏக்கள் அமைச்சர்களை கேள்வி கேட்டு திணறடிப்பது எப்படி என்று பயிற்சி கொடுப்பதற்காக இக்கூட்டம் கூடுகிறது.

 

 

அதுமட்டுமின்றி எதிர்க்கட்சி எம்எல்ஏக்களின் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதைப்பற்றி விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை இன்று கூடுகிறது.அதிமுக அணி தற்போது இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. இந்நிலையில் பிஎஸ் அணியில் 12 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். சசிகலா அணியில் இருந்த 122 எம்எல் ஏக்களும் தற்போது டிடிவி தினகரன் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என இரண்டாக பிரிந்திருக்க யார் எந்த அணியில் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் பலருக்கும் சந்தேகமாக உள்ளது. 

 

 

இதில் சட்டசபைக் கூட்டத்தில் யார் என்ன பிரச்சனையை கிளப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது ஆளுங்கட்சி. அறிவாலயத்தில் கூட உள்ள கூட்டத்தில் சட்டசபையில் முன்னதாகவே மானிய கோரிக்கையில் எந்த கட்சியில் எத்தனை பேர் பேச வேண்டும் என்று வகுக்கப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படும். அதுமட்டுமின்றி வெட்டுத் தீர்மானங்களும் தரப்பட்டுள்ளன.அதுபற்றி அந்தந்த உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று சபாநாயர் கூறியுள்ளார்.

 

 

மேலும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள கூட்டத்தில் சட்டசபையில் எந்த அமைச்சரிடம் என்ன மாதிரியான கேள்விகளை எழுப்ப வேண்டும் யார் யார் பேச வேண்டும் கருணாநிதி வைர விழாவைப் பற்றி சட்டசபையில் எப்படி பேச வேண்டும் என்று பயிற்சி அளிக்கவுள்ளது. 

 

 

மானியக் கோரிக்கைகளின் மத்தியில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன மானிய கோரிக்கைகளின் போதே சில மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்றும் மீதமுள்ள மசோதாக்கள் சட்டசபை கூட்ட தொடரின் இறுதி நாளில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

முன்னதாக நடைபெற்ற சட்டசபைக் கூட்ட தொடரில் வெளிநடப்புகள், வெளியேற்றங்கள் அடிதடி, கலாட்டாக்கள் அரங்கேறின அதுமட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவரின் சட்டையே கிழிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கூட உள்ள கூட்டத்தில் கலப்பட பால், கலப்பட அரிசி பிரச்சனை, குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சி தயாராகி வருகிறது.

 

 

இந்நிலையில் கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதுமட்டுமின்றி 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நாளை கூட உள்ள சட்டசபையில் எம்எல்ஏக்கள் வெட்டு தீர்மானம் கொண்டு வந்தால் பழனிசாமி அரசு கவிழ்வது உறுதியாகிவிடும்.இதனால் எடப்பாடி பழனிசாமி உச்சக்கட்ட பதற்றத்தில் உள்ளார்.