Flash News :
 
  உலக செய்திகள்  
  
    
 

அரபு நாடுகளால் ஓரங்கட்டப்பட்ட கத்தார் கைகொடுக்கும் ஈரான்

 


Published by : Vivek Thiyagarajan                                                        Updated : Monday, June 12,2017   8:10 AM


தோகா :  எல் தீவிரவாதிகளை ஊக்குவிப்பதற்காகவும், அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் தருவதாகவும், நிதியுதவி செய்வதாகவும் பஹ்ரைன், யு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கத்தாருக்கிடையேயான உறவை துண்டித்து விட்டன.மேலும் வான்வழி மற்றும் கடல் வழி போக்குவரத்தையும் துண்டித்து விட்டன.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்நிலையில் ஈரான் நாடு கத்தார் நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டியது. தூதர்களை திரும்பி பெற்ற அந்நாடுகள் தங்கள் நாட்டு மக்களை நாடு திரும்ப வேண்டும் என்றும் கத்தார் நாட்டு மக்கள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தன. உலகத்தில் பணக்கார நாடுகளில் ஒன்றான கத்தார் தனிமை படுத்தப்படுவதால் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

மேலும் ரம்ஜான் நோம்பு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகி இருப்பதாக தெரிகிறது. இதனால் ஓரங்கட்டப்பட்ட கத்தார் அரசுக்கு ஈரான் உதவி செய்ய முன்வந்துள்ளது ஈரான் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் கத்தார் நாட்டுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்க தயாராக உள்ள நிலையில் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டன.

 

 

இந்நிலையில் உணவுத்தட்டுப்பாட்டு நீங்கும்வரையில் தொடர்ந்து உணவுப் பொருட்கள் அனுப்பப்படும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி 440 டன் எடைக்கொண்ட காய்கறி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை மனிதநேய அடிப்படையில் ஈரான் கொடுத்து உதவுகிறது.

 

 

அதுமட்டுமின்றி ஈரான் வழியாக தினமும் 100 விமானங்கள் கத்தாரிலிருந்து ஈரான் வழியாக செல்ல அனுமதியளிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.ஈரான் அரசு கத்தாருக்கு உதவுவதால் கத்தாரில் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.