Flash News :
 
  விளையாட்டு செய்திகள்  
  
    
 

தங்க பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஜெனித்தா ஆண்டோ

 


Published by : Gayathri                                                              Updated : Wednesday, June 7,2017  11:25 AM


திருச்சி : சுலோவாக்கியா நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற 17வது உலக ஊனமுற்றோர் தனிநபர் செஸ் போட்டியில் 5.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஜெனித்தா ஆண்டோ நாடு திரும்பினார். இன்று காலை 11 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார். 

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

சுலோவாக்கிய நாட்டில் உள்ள ருசம்பர்க் நகரில் 28.5.17 முதல் 5.6.17 வரை 17வது உலக ஊனமுற்றோர் தனிநபர் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 12 நாடுகளை சேர்ந்த 40 வீரர்கள் வீராங்கனைகள் கலந்துக்கொண்டனர். இதில் இந்தியாவிலிருந்து ஜெனித்தா உள்பட நான்கு பேர் கலந்துக்கொண்டனர்.

9 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் ஜெனித்தா சிறப்பாக ஆடி சிறந்த வீரர்களான யுக்ரேன் நாட்டை சேர்ந்த யர்னமோ மற்றும் ரஷ்யா நாட்டை சேர்ந்த ஒபச்சி காங்ரேவையும் 7 மற்றும் 8-வது சுற்றுகளில் வென்று சுற்றுகளளின் முடிவில் 5 வெற்றிகள் 3 சமன் மற்றும் 1 தோல்வியுடன் 5.5 புள்ளிகள்  பெற்று முதலிடம்  பிடித்தார்.  தமிழ்நாட்டை சேர்ந்த ஜெனித்தா தொடர்ந்து 5-வது முறையாக தங்க பதக்கம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தன் தாயை இழந்து தனது 3-வது வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்த ஜெனித்தா தனது தந்தையின் உறுதுணையுடன் சதுரங்க போட்டியை விளையாட தொடங்கினார். அடுத்தடுத்து மாவட்டம் மாநிலம் என பல போட்டிகளில் வெற்றி பெற்று சர்வதேச போட்டிகளிலும் விளையாட தொடங்கினார்.

கால்களின் ஓட்டத்தை விட மூளையின் ஓட்டத்திற்கு பலம் அதிகம் என்பதனை நிரூபித்து தொடர்ந்து பதக்கங்களை குவித்துவருகிறார். ஜெனித்தா இவருடைய காய் நகர்த்தல்களுக்கு திணறாத வீரர்களே இல்லை எனலாம். தேசிய மற்றும் உலக அளவிலான சதுரங்க போட்டிகளில் தொடர்ச்சியாக பதக்கங்கள் வென்று வரும் ஜெனித்தா தற்போது       5-வது  முறையாக உலக சாம்பியன் பட்டத்தை பெறுகிறார்.

 

 

வெற்றிவாகை சூடிய ஜெனித்தா தன் சொந்த ஊரான பொன்மலைப்பட்டிக்கு செல்ல விமானம் மூலமாக திருச்சிக்கு வந்தடைந்த தங்க தாரகை ஜெனித்தாவிற்கு மக்கள் சக்தி இயக்க சார்பில் பாராட்டுகளும் வரவேற்ப்பும் வழங்கப்பட்டது. பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஜெனித்தா கூறுகையில் தொடர்ந்து 5-வது முறையாக தங்க பதக்கம் வெல்வது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். 
 
சதுரங்க ஆட்டத்தில் ராணிக்குதான் பவர் அதிகம் என்பதை நிரூபிக்கும் ராணியாக இருக்கும் ஜெனித்தா ஆண்டோ தொடர்ந்து 5-வது முறையாக தங்க பதக்கம் பெறுவதால் ஜெனித்தாவை அர்ஜுனா விருதிற்காக All India Chess Federation தன்னை பரிந்துரைத்துள்ளதாகவும் ஜெனித்தா கூறினார். மேலும் இவருடைய லட்சியமே கிராண்ட் மாஸ்டர் ஆவதுதான் என்றும் கூறினார்.