Flash News :
 
  விளையாட்டு செய்திகள்  
  
    
 

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா கொடிகட்டி பறக்கும் மீம்கள்

 


Published by : Vivek Thiyagarajan                                                        Updated : Monday, June 5,2017   11:09 AM


லண்டன் :  சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதியது. இதில் இந்தியா தனது முதலாவது ஆட்டத்திலேயே பாகிஸ்தானை வீழ்த்தியது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் நேற்று இராவிலிருந்தே உற்சாகத்துடன் கொண்டாட்ட நிலையில் உள்ளனர்.ஆனால் பாகிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தி நிலையில் உள்ளனர்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

மேலும் பாகிஸ்தான் ரசிகர்களை கிண்டல் செய்து ஷோசியல் மீடியாக்களில் மீம்கள் போடப்பட்டிருந்தது.இதில் குறிப்பாக பாகிஸ்தான் ரசிகர்கள் தங்களது ஆக்ரோஷத்தை டிவி பெட்டியின் மேல் காட்டி உடைத்து விடுவார்கள் என்று அதற்கு பாதுகாப்பு வளையம் அமைத்து பார்ப்பது போல் மீம்கள் தயாரித்து கேலி செய்கின்றனர்.

 

 

அதுமட்டுமல்லாமல் போட்டி நடைபெறும்போது மைதானத்தில் திடீரென மழை பெய்தது இதனை மழை அல்ல என்றும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியதால் ஏற்பட்ட பாகிஸ்தான் ரசிகர்களின் கண்ணீர்தான் மழையாக பெய்தது என்றும் கேலி செய்து டிவிட் வெளியாகியது.

 

 

போட்டிக்கு முன்னதாகவே பாகிஸ்தான் ரசிகர்கள் தங்களது டிவி பெட்டிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி விட்டனர் என்று கேலி செய்து டிவிட்கள் வெளியாகியது.

 

 

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார் அதில் பிரம்பாண்ட ஆடை அணிந்துள்ளார்.  அந்த ஆடை இருந்திருந்தால் மைதானத்தை மூடி மழையிலிருந்து காக்க முடியும் என கிண்டல் செய்து பல டிவிட் வெளியாகியது.