Flash News :
 
  உலக செய்திகள்  
  
    
 

பேரழிவுத் தாக்கங்களிலிருந்து பூமியை உங்களால் பாதுகாக்க முடியாது அர்னால்டு சவால்

 


Published by : Vivek Thiyagarajan                                              Updated : Friday, June 2,2017  1:36  PM


வாஷிங்டன் : பருவநிலை மாற்றத்தின் பேரழிவுத் தாக்கங்களிலிருந்து பூமியை பாதுகாக்க விரும்பும் 2015ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்ற அறிவிப்பை வெளியிட்டு அமெரிக்க அதிபர் டொனால் ட்டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள நிலையில் அதற்க்கு விமர்சித்து சவால் விடுத்துள்ளார் அர்னால்டு.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

அமெரிக்காவை பாதுகாப்பதே எனது கடமை. அதை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகிவிடும் என உலகிலேயே அதிக மாசுக்களை வெளியிடும் இரண்டாவது மிகப்பெரிய நாட்டின் அதிபரான ட்ரம்ப் கூறியுள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 

இந்நிலையில்  ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள்  ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் அமெரிக்கா பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து விலகியதை விமர்சனம் செய்துள்ளார். ஒரு பொது ஊழியராக அதிபரின் முதல் பொறுப்பு மக்களைப் பாதுகாப்பதாகும் ஆனால் 200000 பேர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மாசுபாடு பிரச்சினையால் உயிரிழப்பதாக அர்னால்டு கூறியுள்ளார்.