Flash News :
 
  உலக செய்திகள்  
  
    
 

குல்பூ‌ஷண் ஜாதவுக்கு ஆயுளை நீடித்துள்ளது பாகிஸ்தான்

 


Published by : Vivek Thiyagarajan                                           Updated : Friday, June 2,2017  11:07 AM


இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை கருணை மனு உரிமையை நிறைவேற்றிக்கொள்ளும் வரையில் அவரைத் தூக்கில்  போடமாட்டோம் என்று பாகிஸ்தான் அரசுஅறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு குல்பூ‌ஷண் ஜாதவை பாகிஸ்தானில் உளவுபார்த்ததாக குற்றம் சாட்டி ஏப்ரல் மாதம் 10ம் தேதி அவருக்கு மரணதண்டனை விதித்து அந்த நாட்டின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்த தீர்ப்புக்கு எதிராக இந்தியா திஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதை அடுத்து விசாரித்த சர்வதே சநீதிமன்றம் ஜாதவ் மீதான மரண தண்டனையை நிறுத்திவைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்ததோடு இந்த வழக்கில் இறுதிகட்ட முடிவு எடுக்கும் வரையில் ஜாதவ் மீதான மரண தண்டனையை நிறை வேற்றக்கூடாது எனவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தமேல் முறையீட்டு வழக்கில் ஜாதவுக்கு எதிராக தீர்ப்பு அமையுமானால் அவரை உடனே தூக்கில் போடவேண்டும் என்று கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் நபீஸ் ஜக்காரியா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “சர்வதேச நீதிமன்றம் கடந்த 18ம் தேதி பிறப்பித்த தற்காலிக உத்தரவைத் தொடர்ந்து இந்திய ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் முதலில் ராணுவ தளபதியிடமும் அடுத்து ஜனாதிபதியிடமும் கருணை கோரும் மனு உரிமையை தீர்த்துக்கொள்ளும் வரையில் குல்பூஷண் ஜாதவை தூக்கில் போடமாட்டோம். அவர் உயிருடன் இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.