Flash News :
 
  உலக செய்திகள்  
  
    
 

பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி சம்பவம் ..!!

 

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மரண தண்டனை விதித்த கிராம பஞ்சாயத்து


Published by : Vivek Thiyagarajan                                            Updated : Monday, May 29,2017   11:36 AM

இஸ்லாமாபாத் : அனைத்து துறைகளிலும் பெண்கள் சாத்தித்து சரித்திரம் படைப்பது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களின் சுகந்திரம் பறிக்கப்பட்டு அடிமையாக நடத்தப்படும் நிகழ்வுகளும் நடந்துகொண்டுதான் வருகின்றன. பெண் என்ற ஒரு காரணத்தால் உடல் ரீதியாக பாதிக்கப்படும் அவலநிலையும் அதிகரித்து வரும் தருவாயில் பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை கள்ள உறவில் ஈடுபட்டதாக கூறி மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராஜன்பூர் கிராமத்தில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரகேறியுள்ளது. மதவாதம் நிறைந்த இந்த கிராமத்தில் பெண்களுக்கான பல உரிமைகள் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 19-வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது உறவினருடன் கள்ள உறவில் இருந்ததாக கூறி அவருக்கு மரண தண்டை விதித்து அந்தப் பெண்ணை கிராம மக்கள் கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனால் இதற்க்கு உண்மையான பின்னணி என்னவென்றால் அந்த பெண் தூங்கும் சமயத்தில் அவருடைய உறவுக்கார இளைஞன் ஒருவன் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். நடந்த உண்மையை பஞ்சாயத்தில் கூறியும் அதை யாரும் பஞ்சாயத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

 

இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண் தனது பாதுகாப்பிற்காக கிராமத்தைவிட்டு தப்பியோடி புகார் அளித்துள்ளார் அதன்பிறகு புகாரின் பெயரில் பஞ்சாயத்துதாரர்கள் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர் காவல் துறையினர். மேலும் அந்த பெண் பாதுகாப்பாக அரசு விடுதியில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு மகளிர் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதிகளால் பலரின் வாழ்வுகள் கேள்வி குறியாக மாறிவிடுகிறது.