Flash News :
 
  அரசியல்  
  
    
 

தூத்துக்குடி திமுக செயலாளர் என்.பெரியசாமி மறைவு

 


Published by : Vivek Thiyagarajan                                                 Updated  : Friday, May 26,2017   11:04 AM


சென்னை :  தூத்துக்குடியைச் சேர்ந்த என்.பெரியசாமி திமுகவில் தொடர்ந்து 40 ஆண்டு காலம் செயல்பாட்டில் இருந்தவர் அதுமட்டுமின்றி 1989  மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு முறை எம்.எல்.வாக பதவி வகித்தவர்.30 ஆண்டு காலம் தொடர்ந்து மாவட்ட செயலாளராக இருந்த இவர் திமுகவின் சக்தியாக இருந்து திமுகவின் வலிமைக்கு பாடுபட்டவர்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்நிலையில் அவருக்கு நுரையீரல் தொடர்பான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது இதனால் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை காலமானார்.

என்.பெரியசாமி உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா, சகோதரி செல்வி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமின்றி திமுக வின் சார்பில் 3 நாள் துக்கம் அறிவிக்கப்பட்டு திமுகவின் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.