Flash News :
 
  விளையாட்டு செய்திகள்  
  
    
 

பரபரப்பு ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் புனேவை வீழ்த்தி மும்பை அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது

 

ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி அரங்கத்தை அதிரவைத்த மும்பையின் வெற்றி


Published by : Vivek Thiyagarajan                                              Updated : Monday, May 22,2017   9:01 AM

ஹைதராபாத் :  வெகுநாட்களாக ராசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த பிஎல் டி20 சீசன் 10-ன் இறுதிக்கட்ட சுற்று நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மோதிய மும்பை புனே அணிகள் எதிர்பார்க்காத திருப்பங்களை தந்து ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்தில் ஆழ்த்தி விறுவிறுப்பான இறுதி ஓவரில் சிறப்பாக ஆடி ஒரு ரன் வித்தியாசத்தில் புனேவை பின்னுக்கு தள்ளி பிஎல் சீசன் 10-ன் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது மும்பை.

இதுவரை இந்த இரண்டு அணிகளும் கடந்து வந்த ஆட்டங்களில் வெற்றி தோல்வி என இரண்டையும் சந்தித்து தனது கடின முயற்சியால் மட்டுமே இறுதி சுற்றிற்கு முன்னேறியுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களில் ஆதரவை பெற்ற இவ்விரு அணிகளும் நேற்று இரவு பலபரிச்சையில் ஈடுபட்டனர். 

இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதற்கு காரணம் கடந்த சீசன்களில் கோப்பையை வென்ற அணிகள் முதலில் டாஸ் வென்று பேட்டிங்யை தேர்வு செய்து ஆடியதுதான் எனவே அதனையே மும்பையும் சிந்தித்ததாக கூறப்படுகிறது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இதனையடுத்து புனே அணி பந்து வீச முதலில் களமிறங்கிய பேட்ஸ்மேன்களான சிம்மன்ஸ் மற்றும் பாத்திவ் பட்டேல் சிறிது தொய்வுடனே ஆட்டத்தை தொடங்கினர். புனே அணியின் அசராத பந்துவீச்சால் பார்திவ் பட்டேல் 6 பந்துகளில் 4 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பிறகு அம்பதி ராயுடு களமிறங்கி சொற்ப ரன்களிலே விக்கெட்டை இழந்தார்.

புனே அணி உத்வேகத்துடன் ஆடி ரன் ரேட்டை ஏறவிடாமல் விக்கெட்டுகளை பெற தொடங்கியது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா முதலானோர் குறைத்த ரங்களிலேயே ஆட்டம் இழந்தது அணியை மேலும் பின்னடைய செய்தது அதனையடுத்து களமிறங்கிய க்ருனால் பாண்ட்யா நின்று ஆடி ஸ்கோர் ரேட்டை மளமளவென ஏற்ற தொடங்கினார்.

 

 

மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து 130 எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை புனேவிற்கு நிர்ணயித்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த புனே அணியில் திரிபாதி மற்றும் ரஹானே ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். 

திரிபாதி குறைந்த ரன்களிலேயே ஆட்டத்தை விட்டு வெளியேற ஸ்மித் களமிறங்கி ரஹானே உடன் இணைந்து ரன்களை குவிக்க தொடங்கினர். ரஹானே 38 பந்துகளில் 44 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார். எனினும் ஸ்மித் நின்று ஆடி தோணியுடன் இணை சேர தோணி 13 பந்துகளில் 10 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். 

இறுதி ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஸ்மித் மற்றும் மனோஜ் திவாரி விக்கெட்டை பறிகொடுத்து மும்பையின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதிக்கட்டத்தில் ஒரு பந்துக்கு
4 ரன்கள் எடுத்தால் வெற்றி என கிறிஸ்டியன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் விளையாட கடைசியில் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது புனே அணி.

 

 

பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தொய்வுடனே ஆடிய மும்பை அணி பரபரப்பான கடைசி ஓவரில் புனே இடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிதானமாக ஆடி அடுத்தடுத்த பந்துகளில் திருப்பு முனைகளை தந்து 2013 மற்றும் 2015க்கு பிறகு மீண்டும் தற்போது மூன்றாவது முறையாக பிஎல் டி20 சீசன் 10-ன் சாம்பியன் கோப்பையை தட்டி சென்றுள்ளது மும்பை. 

புனே ஆட தொடங்கிய 10-வது ஓவர்களிலேயே மும்பை தோற்று விடுமோ என ஒட்டுமொத்த அரங்கமும் எண்ணிக்கொண்டிருந்தத்தருவாயில் கடைசி ஓவரில் ஆட்டத்தின் போக்கை திசைமாற்றி தன் முழு பலத்தையும் காட்டி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை தன் பக்கம் இழுத்து தனது ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றி 3-வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது மும்பை.