Flash News :
 
  விளையாட்டு செய்திகள்  
  
    
 

ஐ.பி.எல் சீசன் 10-ன் சேம்பியன்ஸ் யார்...?

 

இன்று இரவு ஹைதராபாத்தில் நடக்கும் இறுதிச்சுற்றில் மும்பை-புனே மோதல்


Published by : Vivek Thiyagarajan                                              Updated : Sunday, May 21,2017   8:00 AM

ஹைதராபாத்: கடந்த ஒன்றரை மாத காலமாக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்தபிஎல் 
டி20 சீசன் 10ன் இறுதிப்போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது. இதில்மும்பை 
இந்தியன்ஸ் மற்றும் புனே நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. மும்பைஅணியை 
பொறுத்தவரை தற்போது நான்காவது முறையாக பைனலில் பங்கேற்கிறது. 2013 மற்றும் 
2015-ன் சேம்பியன்ஸ் கோப்பையை மும்பை வென்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

மேலும் கேப்டன் ரோஹித் சர்மா, அம்பத்தி ராயுடு, பொல்லார்டு முதலானோர்ஏற்கனவே
கோப்பை வென்ற அணியில் விளையாடியவர்கள் என்பதால்இறுதிக்கட்டத்தினை எப்படி 
எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பர் எனினும்அணியில் தேவைக்கேற்ப 
பாண்ட்யா சகோதரர்கள் பட்டையை கிளப்புவதால் அணி தக்கபக்கபலத்துடன் இருக்கிறது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

புனே அணியின் துருப்புசீட்டாக டோனி கலக்கிவருகிறார். முதல் தகுதிசுற்றில் 26பந்துகளில் 40 ரன்களை எடுத்து மீண்டும் தன் பழைய வேகத்துடன் ஆடிவருவதால் அணிக்கு வலு
சேர்க்கிறது. அதுமட்டுமின்றி இவர் 7வது முறையாக பைனலுக்கு செல்லும் அணியில்
பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புனே அணியின் கேப்டன் ஸ்மித்தின் சிறப்பான மேற்பார்வையின் கீழ் இரண்டு லீக்
ஆட்டங்களிலும் முதலாம் தகுதி சுற்றிலும் மும்பையை வென்றது. தற்போது
இறுதிக்கட்டத்தில் இவ்விரு அணிகளும் மோதுவதால் வெற்றி யார் பக்கம் என
கணிக்கமுடியாமல் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளனர் ரசிகர்கள்.


கடந்த 2011 முதல் 2015 வரை புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தஅணிகள்
கோப்பையைவென்றன.அதேபோல் இம்முறையும்  புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் உள்ள புனே அணி கோப்பையை வெல்லும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.புனே அணிக்கு
இதுவே இறுதி ஆண்டு என்பதால் கோப்பையை வெல்ல முழு முயற்சியுடன் 
செயல்பட்டுவருகின்றனர்.இதுவரை நடந்த 14 போட்டிகளில் 10 சுற்றில் மும்பை வென்றது.

 

 

மேலும் 2-வது தகுதி சுற்றான குவாலிபையர்-2ல் வென்று புள்ளிப்பட்டியலில் 20 

புள்ளிகள்பெற்று முதலிடத்திலும் புனே அணி 9 சுற்றில் வென்று முதல் தகுதி 
சுற்றானகுவாலிபையர்-1லும் வென்று நேரடியாக இறுதி கட்டத்திற்கு முன்னேறி
புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இரு அணிகளுக்கும் ரசிகர்கள் ஆதரவு இருப்பதால் இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் ஐபிஎல்
 டி20 சீசன் 10-ன் இறுதிச்சற்று நடக்கவுள்ளது ஹைதராபாத் நகரின் வெப்பநிலையை
பொறுத்தவரைஅதிக பட்சம் 42, குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியாசாக இருக்கும் எனவும், 
மழைபெய்ய வாய்ப்பு இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களின் 
எண்ணம்நிறைவேறுமா வெற்றி வாகை சூடி கோப்பையை கைப்பற்றும் அணி எது என்பதை
எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.