Flash News :
 
  விளையாட்டு செய்திகள்  
  
    
 

அதிரடி ஆட்டத்தால் 4-வது முறையாக பைனலுக்கு முன்னேறிய மும்பை

 

சாம்பியன்ஸ் பட்டத்தை வெல்ல போகும் அணி எது..?


Published by : Kiruthiga                                                                   Updated : Friday, May 19,2017    11:45 PM


பெங்களூர் :  அரை இறுதி சுற்றாக கருதப்படும் குவாலிபையர்-2 சுற்றானது இன்று பெங்களூரில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் துவங்கியது. இதில் எலிமினேட்டர் சுற்றில் வென்ற கொல்கத்தா அணியும், குவாலிபையர்-1ல் தோல்வியடைந்த மும்பை அணியும் மோதிக்கொண்டன. 

லீக் ஆட்டங்களில் கொல்கத்தாவுடன் மும்பை மோதிய 20 ஆட்டங்களில் 15 ஆட்டங்களை மும்பை வென்று தன் பலத்தை நிரூபித்த நிலையில் கொல்கத்தா மிகுந்த உத்வேகத்துடன் மும்பையை எதிர்க்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.

ஆட்டம் ஆரம்பிக்கப்பட்ட சில ஓவர்களிலேயே கொல்கத்தா வீரர்களான கிரீஸ்லின், சுனில் நரேன், கிரான்ட் ஹோம், உத்தப்பா மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் உள்பட அனைவரும் சொற்ப ரன்களிலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர்.

 

 

பெங்களூரு சின்னசாமி மைதானமானது பந்துவீச்சாளர்களுக் கே சாதகமாக இருக்கும் என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 107 ரன்கள் மட்டுமே எடுத்து 108 எடுத்ததால் மீண்டும் 4-வது முறையாக பைனலுக்கு செல்லும் மும்பை அணி புனே அணியோடு வருகிற 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது.

குவாலிபையர்-1 சுற்றில் மும்பை புனேயிடம் தோற்றுள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முழு பலத்துடன் மும்பை புனேவை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள பி எல் டி20 சீசன் 10 –ன் சாம்பியன் யார் என்ற கேள்விக்கு விடை மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனே அணியின் மோதலின் முடிவில் தெரிய வரும் என்பதால் ஆவலுடன் அனல்பறக்கும் இறுதிக்கட்டத்தை எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.