Flash News :
 
  விளையாட்டு செய்திகள்  
  
    
 

கொல்கத்தாவை கலங்கடித்த மும்பை பைனலுக்கு முன்னேற்றம்

 


Published by : Vivek Thiyagarajan                                              Updated : Friday, May 19,2017     11:10 PM 


குவாலிபையர்-2 ரசிகர்களின் ஆரவாரத்துடன் துவங்கிய மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதும் குவாலிபையர்-2 முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்யை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கிரீஸ்லின், சுனில் நரேன், கிராண்ட் ஹோம், உத்தப்பா, அணியின் தலைவன் கௌதம் கம்பீர் ஆகியோர் மல மல வென விக்கெட்டை பறிகொடுத்தனர்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

108 ரன்கள் 20  ஓவர் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சிமோன்ஸ் மற்றும் பார்திவ் பட்டேல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ராயுடு 11 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின் ஜோடி சேர்ந்த க்ரூனாள் பாண்டியா அணியின் தலைவர் ரோஹித் சர்மா நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். 47 பந்துகளில் 20 ரன் தேவை என்ற நிலையில் அணி தலைவர் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தார்.

 

 

பின்னர் இணைந்த க்ரூனாள் பாண்டியா பொலார்ட் ஜோடி வெற்றிக்கு வித்திட்டனர் அபாரமாக ஆடிய க்ரூனாள் பாண்டியா 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இதனால் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து பைனலுக்கு முன்னேறியது மே 21,2017 அன்று மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணிகள் பைனலில் மோத உள்ளன