Flash News :
 
  விளையாட்டு செய்திகள்  
  
    
 

இறுதி சுற்றுக்குள் நுழைய போகும் அணி எது..?

 

அரை இறுதி சுற்றான குவாலிபையர்-2ல் இன்று மும்பை-கொல்கத்தா மோதல்


Published by : Vivek Thiyagarajan                                                  Updated : Friday, May 19,2017   10:07 AM


கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிஎல் டி20 சீசன் 10 தற்போது அனல்பறக்கும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. குவாலிபையர்-1 முடிவடைந்து புனே அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் அதில் தோற்ற மும்பை அணி எலிமினேட்டர் சுற்றில் வென்ற கொல்கத்தா அணியுடன் குவாலிபையர்-2 சுற்றில் மோதுகிறது.

அரை இறுதியாக கருதப்படும் குவாலிபையர்-2 போட்டியானது இன்று இரவு பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. இதில் குவாலிபையர்-1ல் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் எலிமினேட்டர் சுற்றில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

சுமார் ஒன்றரை மாத காலமாக நடந்துவரும் பிஎல் டி20 சீசன் 10ல் இதுவரை 20 போட்டிகளில் மும்பையும் ,15 கொல்கத்தாவும் மோதியுள்ளன. இதில் 15 போட்டிகளில் கொல்கத்தாவை மும்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா பலமுறை தோற்றிருந்தாலும் அனைத்திற்க்கும் சேர்த்து பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இரு முறை பிஎல் சாம்பியன் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

பேட்டிங் பெலிங் என இரண்டிலும் சம பலத்துடன் இருக்கும் இவ்விரு அணிகளில் எந்த அணி இறுதிக்கட்டத்திற்குள் செல்லும் என ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர்.பெங்களூரு ஆடுகளம் பந்துவீச்சுக்கே சாதகமாக இருந்து வரும் நிலையில் அதிக ரன் எடுப்பது எளிதல்ல. எனவே, பந்து வீச்சாளர்கள் கையில் தான் வெற்றி இருக்கும் என கருதப்படுகிறது.

 

 

அதே சமயம் எலிமினேட்டர் சுற்றின் போது மழை குறிக்கிட்டதை போல, இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளன. மாற்று நாள் இல்லை என்பதால் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் புள்ளிபட்டியலில் முன்னிலையில் உள்ள அணி இறுதி சுற்றுக்கு முன்னேறிவிடும் என கூறப்படுகிறது.

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் புள்ளிபட்டியலில் மும்பை முதல் இடத்திலும் கொல்கத்தா 4-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று வெற்றி பெரும் அணி வருகிற 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் புனேவுடன் மோதும்.