Flash News :
 
  அரசியல்  
  
    
 

டிடிவி தினகரனை அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் சிறைக்கு சென்று சந்தித்தது ஏன்...?

 

கட்சியிலிருந்து ஒடுங்கிவிட்டதாக கூரிய டிடிவி தினகரனை திவார் சிறைக்கு நேரில் சென்று சந்தித்ததன் பின்ணணி


Published by : Gayathri                                                            Updated : Thursday, May 18,2017      11:00 AM


சென்னை :  சிறைக்கு செல்வதற்க்கு முன் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தான் கட்சி பொறுப்பிலிருந்து ஒதுங்கி விட்டதாகவும், தனக்கென்று ஆதரவாக எம்எல்ஏக்கள் யாரும் இல்லை என்று கூறிய வார்த்தைகளை பொய்யாக்கும் விதமாக அதிமுக எம்பி எம் எல் ஏக்கள் திவார் சிறைக்கு நேரில் சென்று டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசித்துள்ளனர்.

ஜெயலலிதா மறைந்த பிறகு இரு அணிகளாக பிளவுப்பட்ட அதிமுக அணியில் ஒரு அணியான அதிமுக அம்மா அணியின் உறுப்பினராக இருந்த டிடிவி தினகரன் சசிகலா சிறைக்கு சென்ற பின் அதிமுக துணை செய்யலாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் ஆர்.கே நகர் தொகுதியில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இரட்டை இலை சின்னம் பெற இடைத்தரகர் சுகேஷ் மூலம் ரூ.50 கோடி பேரம் பேசியதற்காக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்த ஏப்ரல் 22-ஆம் தேதி விசாரணைக்காக டெல்லி நீதிமன்றம் அழைத்துள்ளது. அங்கு சென்ற அவர் 4 நாட்கள் விசாரணைக்கு பிறகு டெல்லி திவார் சிறையில் அடைக்கப்பட்டார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

15 நாள் சிறை தண்டனைக்கு பிறகு மீண்டும் 26-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து டிடிவி தினகரனின் ஜாமீன் மனு பற்றிய விசாரணையை தள்ளி வைத்துள்ளது. டெல்லி நீதிமன்றம்  டிடிவி தினகரன் விசாரணை கைதியாக இருப்பதால் தடையதுமின்றி அவரது ஆதரவாளர்கள் அவரை சிறையில் சந்தித்து வருகின்றனர். 

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், எஸ்.ஜி சுப்ரமணியன், முன்னாள் எம்எல் சாமி, எம்பிக்கள் விஜிலா சக்தியானந்த், மரகதம் ஆகியோர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து 30 நிமிடம் பேசியதாக தெரிகிறது.

 

 

டிடிவி தினகரன் எங்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர். அவரை சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. இக்கட்டான இந்த காலகட்டத்தில் நாங்கள் எப்படி அவரை ஒதுக்கி வைக்க முடியும்? என்று கேட்டார்.

திவார் ஜெயிலில் இருந்துகொண்டே அரசியலையும் கவனித்து வரும் டிடிவி தினகரானால் அதிமுக இரு அணிகள் இணைவதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்படாது என தகவல்கள் கூறுகின்றன.