Flash News :
 
  விளையாட்டு செய்திகள்  
  
    
 

குவாலிபையர்-1 சுற்றில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா

 

நேற்று நடந்த ஐ.பி.எல் எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா - மும்பை அணியை எதிர்கொண்டு வெற்றி பெறுமா..?


Published by : Vivek Thiyagarajan                                             Updated : Thursday, May 18,2017   8:16 AM


பெங்களூர் :  விறுவிறுப்பாக நடந்துவரும் ஐ.பி.எல் டி20  சீசன்யின் எலிமினேட்டர் சுற்று நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இதில் சன்ரைஸர்ஸ் ஹைட்ரபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் எதிர்க்கொண்டன.

பெங்களூரில் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த எலிமினேட்டர் சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஹைதராபாத் சன்ரைஸர்ஸ் மற்றும் 4-வது இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியதில் 7  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது கொல்கத்தா.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் பேட்ஸ் மேன்களாக கேப்டன் வார்னர், ஷகர் தவான் முதலில் களம் இறங்கி ஆட்டத்தை தொடங்கி வைத்தனர்.

நிதானமாக ஆடிய ஷகர் தவான் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய வில்லியம்சன் 26 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 24  ரன்களும்,வாரினர் 35 பந்துகளில், 37 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
 
ஏற்கனவே காயமடைந்த நிலையில் இருந்த யுவராஜ் சிங் அடுத்து களமிறங்கிய 9 பந்துகளில் 2 பவுண்டரி உட்பட 9 ரன்கள் எடுத்தார். தமிழக வீரர் விஜய் சங்கர் 17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஜோர்டான் டக் அவுட் ஆகி ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.

 

 

கடைசியாக களமிறங்கிய ஓஜா 16 ரன்கள் சேர்ந்த நிலையில் இறுதி பந்தில் ஆட்டமிழந்தார் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து 129 எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை கொல்கத்தா அணிக்கு நிர்ணயித்தது.

அடுத்து கொல்கத்தா அணி களமிறங்கியபோது மழை பொழியத் தொடங்கியது சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து பெய்த மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது மழை நின்று மீண்டும் ஆட்டம் தொடங்க 12.55 ஆனதால், 20 ஓவர்கள் முழுவதுமாக நடத்த போதிய நேரம் இல்லை என நடுவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் கொல்கத்தா அணியினருக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

 

 

இதனை ஒப்புக்கொண்ட இரு அணிகளும் ஆட்டத்தை தொடங்கினர், நன்றாக ஆடிய கொல்கத்தா அணி 5.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் சிறப்பாக ஆடி ஹைதராபாத்தை வென்ற கொல்கத்தா அணி அடுத்த சுற்றிற்க்கு முன்னேறியுள்ளது.

வருகிற 19-ம் தேதி வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள சின்னச்சாமி ஸ்டேடியத்தில் குவாலிபையர்-2 சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் புனே ரைசிங் அணியும் மோதவுள்ளனர். இரு அணிகளுக்கும் ரசிகர்கள் ஆதரவு இருப்பதால் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.