Flash News :
 
  அரசியல்  
  
    
 

கடைசி மூச்சு உள்ளவரை கட்சிக்காக உழைப்பேன் - நடிகை விந்தியா

 

இரு அணிகளாக பிரிந்துள்ள அதிமுக கட்சி மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று தன் கருத்தை வெளியிட்டார் நடிகை விந்தியா


Published by : Vivek Thiyagarajan                                                   Updated : Thursday, May 18,2017   10:16 AM


சென்னை :  புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பின் அதிமுக அணி புரட்சி தலைவி அதிமுக அம்மா அணி எனவும், அதிமுக அம்மா அணி எனவும் இரு அணிகளாக பிரிந்து இரட்டை இலை சின்னத்திற்காக போட்டியிட்டு கொண்டிருக்கும் தருவாயில் இரு அணிகளும் மீண்டும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும், எந்த ஒரு ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் கட்சி பொறுப்பை ஆற்ற வேண்டும் என்றும் தன் கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா.

மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற நடிகை விந்தியா  தன் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை வைத்து வணங்கியதோடு அங்கிருந்த பொதுமக்களுக்கும் அதை வழங்கியுள்ளார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகை விந்தியா கூறுகையில் ஜெயலலிதா அம்மா அவர்கள் வாழ்ந்த காலங்களில் போயஸ் கார்டனுக்கு சென்று என் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை கொடுப்பேன். தற்போது அவர் கடற்கரையில் உறங்கி கொண்டிருப்பதால் இங்கு வந்து கொடுக்கிறேன். எனக்கு ஜெயலலிதா அணியில் கொடுக்கப்பட்ட அடையாளமே போதுமானது எந்த ஒரு அணியையும் ஆதாயத்திற்காக தேட வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது பல்வேறு கருத்து வேறுபாடுகளால் பிளக்கப்பட்டுள்ள அதிமுகாவின் இரு அணிகளில் ஆட்சியில் இருக்கும் அணியில் சேர வேண்டுமா? அல்லது உரிமையில் இருக்கும் அணியில் சேர வேண்டுமா? என்று ஒருபக்கம் மட்டும் ஆதரிக்க தான் விரும்பவில்லை. 

அதுமட்டுமின்றி "இரட்டை இலை என்பது சின்னம் அல்ல ஒன்றரை கோடி தொண்டர்களின் ஒட்டுமொத்த எண்ணம்" அதை சீர்குலைக்கும் வகையில் இரு அணிகளாக பிரிந்துள்ளது வருந்தத்தக்கது என்றும் இரு அணிகள் இணைவது முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

 

 

ஆனால் ஏன் இணைய வேண்டும் என்பதற்கு உதாரணமாக "பசுக்கள் தனியாக இருந்தால் சிங்கம் அவற்றை எளிதாக வேட்டையாடும் ஆனால் சிங்கமே தனியாக இருத்தல் சிறு நரி கூட மோதி பார்க்கும்" என எடுத்துரைத்து இரு அணிகளையும் மீண்டும் இணையும் படி கேட்டு கொண்டார்.

மேலும் புரட்சி தலைவி அம்மா இறந்த பிறகு தான் மனதளவில் பெருமளவு பாதிக்க பட்டதால் சற்று ஒதுங்கி இருந்ததாகவும் தற்போது படிப்படியாக அந்த சோகத்திலிருந்து மீண்டு வருகிறேன் என்றும் எனவே, நான் ஜெயலலிதாவிற்கு கொடுத்த சாத்தியத்தின்படி அதை காப்பாற்ற என் கடைசி மூச்சு உள்ள வரை கட்சிக்காக உழைப்பேன் என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார். 

ஆகையால் பதவிக்கும் அதிகாரத்திற்கும் மட்டும் பணிபுரியும் நான்கு ஆண்டு கால ஆட்சியாக இல்லாமல் நானுறு ஆண்டுகள் ஆனாலும் அதிமுக கட்சியும், புரட்சி தலைவி அம்மாவும் மக்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருப்பதற்காகவாவது இரு அணிகளும் இணைய வேண்டும் என்று அவரது விருப்பத்தை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார் நடிகை விந்தியா.