Flash News :
 
  அரசியல்  
  
    
 

இரண்டாவது முறையாக விஜயபாஸ்கர் வீட்டில் ஐ டி ரைடு... - பூட்டிய அறையில் இருப்பது என்ன..?

 

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் இரண்டாவது முறையாக இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்


Published by : Vivek Thiyagarajan                                  Updated : Wednesday, May 17,2017  1:04 PM


புதுக்கோட்டை : 
          புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர்  வீட்டில்  இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஏப்ரல் 7-ந் தேதி நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 5கோடி ரூபாய் பணம், நகை மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கணக்குகள் சரிபார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது மீண்டும் வருமானத்துறை சோதனை நடத்தி வருவதற்க்கு, முன்பு நடத்திய சோதனையின்போது ஓர் அறை சீல் செய்து இருந்ததால் அதனை சோதிக்காமல் விட்டதே முக்கிய கரணம் என கூறப்படுகிறது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

கடந்த 5ஆம் தேதி விஜயபாஸ்கரின் மனைவியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள்ளேயே புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் இன்றும் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

பெண் அதிகாரி தலைமையில் 5பேர் கொண்ட வருமான வரித்துறையினரின் குழு தற்போது சோதனை நடத்தி வருகின்றனர் . இதையடுத்து இவருடைய கல்லூரி, குவாரி முதலிய இடங்களிலும் சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி முன்பு நடத்தப்பட்ட சோதனையின் ஆவணங்கள்  மற்றும் பூட்டியிருந்த அறைகள் உட்பட அனைத்தையும் சோதித்துவருகின்றனர் வருமான வரித்துறை.

 

 

அரசியலிலும் சமீபகாலமாக விஜயபாஸ்கர் பெயர் அடிபட்டுவரும் நிலையில் வருமான வரித்துறையினரின் அடுத்தடுத்த அதிரடி சோதனையால் என்ன செய்வது என புரியாமல் தவிக்கிறார் விஜயபாஸ்கர். மேலும் இன்று நடக்கும் சோதனைக்குறித்த முடிவுகள் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னரே வெளியிடப்படும் என்று வருமானத்துறை அறிவித்துள்ளது.