Flash News :
 
  அரசியல்  
  
    
 

கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் நடந்தது என்ன..? பின்னணியின் உண்மை தகவல்

 

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உட்பட 14 இடங்களில் நடந்த சி.பி.ஐ சோதனை தீவிர கட்டத்தை எட்டியுள்ளது


Published by : Gayathri                                                             Updated : Wednesday, May 17,2017   10:40 PM


சென்னை :  ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வாங்கித்தருவதற்காக லஞ்சம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோரை இயக்குனராக கொண்ட ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2007-ம் ஆண்டில் வெளிநாட்டு முதலீடுகளைப்பெற மத்திய பொருளாதார விவகாரங்கள் துரையின்க்கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் அனுமதியை வாங்க பா.சித்தம்பரம் இடம் உதவியை நாடியுள்ளது. 

அதற்க்கு ஐஎன்எஸ் மீடியா நிறுவனம் ரூ.4.62 கோடி அளவுக்கு அந்நிய முதலீட்டை பெற ஒப்புதல் அளித்துள்ளார் பா.சிதம்பரம். அனால் அரசுக்கு புறம்பாக ரூ.305 கோடி அளவிலான அந்நிய முதலீட்டை ஐஎன்எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்த முறைகேட்டை கண்டுபிடித்த வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திற்கு தகவல் அளித்ததன் விளைவாக ஐஎன்எக்ஸ் நிறுவனத்திற்கு இதுகுறித்து விளக்கம் அளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பியது. 

இதனை தொடர்ந்து சட்ட பிரச்சனைகளில் இருந்து ஐஎன்எக்ஸ் நிறுவனம் தப்பிப்பதற்காக கார்த்தி சிதம்பரம் உதவியுள்ளதை 2008 ஜூன் தேதியிட்ட கடிதம் ஒன்றில் அதற்கான யோசனைகளை அனுப்பியுள்ளதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது சிபிஐ.

மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை போன்றே ஐஎன்எக்ஸ் நிறுவனம் தங்கள் தரப்பு விளக்கமாக அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் அளித்துள்ளது. அதன்பிறகு கார்த்திக்கின் கட்டுப்பாட்டில் ஐஎன்எக்ஸ் நிறுவனம் வந்ததோடு ஆலோசனை வழங்கியதற்காக ரூ.10 லட்சத்தை கார்த்திக்கு அவரது நண்பர்கள் நடத்திவரும் அட்வான்டேஜ் ஸ்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனத்தின் பெயரில் வழங்கியுள்ளதை நேற்று நடந்த அதிரடி சோதனையின் மூலம் உறுதிசெய்துள்ளது சிபிஐ.

 

 

மேலும் ஐஎன்எக்ஸ் நிறுவனத்தின் வரவு செலவு கணக்கில் அந்நிய முதலீட்டை குறைத்துக்காட்டி சட்டவிரோதமாக அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடமிருந்து அனுமதி பெற்று தருவதற்காக லஞ்சம் வாங்கியதை உறுதிசெய்துள்ளது.

எனவே, அவர்மீது இந்திய தண்டனைச் சட்டம்  120 பி , 426 பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் 13(2), 13(1) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு டெல்லி சி.பி.ஐ பொருளாதார குற்றங்கள் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ஆர்.பார்த்தசாரதி இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் பழிவாங்கும் காரணத்திற்காக என் மீது சி.பி.ஐ ஏவப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போதிய ஆதாரமின்றி தொடுக்கப்பட்ட புகார்களாகும். இதனை முறைப்படி எதிர்கொண்டு நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்றார். 

அவரது தந்தையும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறும்போது "எனது அரசியல் பணிகளை தடுத்து நிறுத்தும் வகையில் பாஜக அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது" என குற்றம்சாட்டியுள்ளார்