Flash News :
 
  விளையாட்டு செய்திகள்  
  
    
 

களத்தை அதிர வைத்த டோனியின் சிக்ஸர்ஸ் பைனலுக்கு முன்னேறிய புனே பரபரப்பு கட்டத்தில் ஐ.பி.எல்

 


Published by : Vivek Thiyagarajan                Updated : Wednesday, May 17,2017 11:00AM

மும்பை :  நேற்று நடந்த ஐ.பி.எல் குவாலிபையர்-1 சுற்றில் மும்பை இந்தியன்ஸ்- ரைசிங் புனே அணிகள் மோதி கொண்டன. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை அபாரமாக வென்றது புனே.

ஸ்மித் தலைமையாக கொண்ட ரைசிங் புனே அணி டோனியின் பக்கபலத்தால் அபாரமாக ஆடி பைனலுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சுற்றில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது அதையடுத்து களமிறங்கிய புனே அணி தொடக்கத்தில் ஸ்மித் உள்ளிட்ட பல பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால் ஸ்கோர் ரேட்டில் குறைந்த புள்ளிகளேயே பெற்றன.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

அதையடுத்து களமிறங்கிய ரஹானே 56 ரன்களும், மனோஜ் திவாரி 58 ரன்களும் எடுத்து தனது அணிக்கு புள்ளிகளை ஏற்றினார். அதனை தொடர்ந்து களமிறங்கிய டோனி இறுதி கட்டத்தில் 26 பந்துகளில் 40 ரன்களை விளாசி ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார்.

இவர் தொடர்ந்து அடித்த சிக்ஸர்ஸ் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டாரின் பிரபல வசனமான "நா எப்படி போனேனோ அப்பிடியே திரும்பி வந்துட்டேனு சொல்லு டோனிடா...." என்பதை நினைவூட்டும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.

டோனியின் இந்த ஆட்டம் அணியின் வெற்றிக்கு மிகவும் காரணமாக இருந்தது. புனே ஆட்டத்தின் முடிவில் 162 ரன்கள் எடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை மும்பைக்கு நிர்ணயித்தது. பின்னர் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142  ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை ழுவியது.

 

 

இந்த சீசனில் 3 முறை மும்பையுடன் மோதி மூன்று முறையும் மும்பையை தோற்கடித்து இறுதி சுற்றிற்க்கு நுழைந்துள்ளது ரைசிங் புனே அணி. டோனியின் அனல் பறக்கும் ஆட்டத்தால் குஷியான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுகளை அள்ளி தெளிக்கின்றனர். 

மேலும் மும்பை அணி தோல்வியை எண்ணிக் கொண்டிருக்கிறது எனவும் மும்பை ஆட்டத்தினை கேளி செய்தும், டோனியின் ஆட்டத்தையும் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்களின் செயலையும் வைத்து டிவிட் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.அதுமட்டுமின்றி பாகுபலி படத்தில் வரும் பிரபாஸ், அனுஷ்கா கதாபாத்திரத்தை ஸ்மித், டோனியுடன் ஒப்பிட்டு போட்டுள்ள கமெண்ட்டுகள் லைக்ஸ்யை அள்ளியுள்ளது.