Flash News :
 
  அரசியல்  
  
    
 

ஆதிமுக ஆட்சியை எப்போதோ கவிழ்த்திருப்போம் கருணாநிதி சொன்ன வார்த்தைக்காக அமைதியாக இருக்கிறோம் - துரைமுருகன்

 


Published by : Kiruthiga                                                             Updated : Tuesday, May 16,2017    4:00 PM


சென்னை :  சென்னையில் உள்ள அமைந்தகரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுகவின் துணை பொருளாளர் துரைமுருகன் கூறுகையில் "ஜெயலலிதாவிற்கு ஏதாவது நிகழ்ந்தால் கட்சி உடையும் அச்சமயத்தில் அந்த பக்கமிருக்கும் ஆட்களை இழுக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி அப்போதே கூறியதாக கூறினார் இதற்காக தான் அமைதியாக உள்ளோம் இல்லையெனில் அப்போதே ஆட்சியை கவிழ்த்திருப்போம்" என கூறினார்.

மேலும் நீட் தேர்வு தேவையற்றது என்றும், அது இந்தியை திணிக்க கூடிய செயல் என்றும் கூறினார். நீட் தேர்வு மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக பேசுகையில் தனது நவரசத்தையும் காட்டியுள்ளார்.

 


 
Tamil Short Film - காசு பணம் துட்டு money money
Short FIlm தமிழ் | Sevi Maduthu (செவி மடுத்து)| Farmers Situation | watch on vvmedia
World No 2 Biggest Forest in Tamilnadu
"Rajinikanth போல் என்னால் நடிக்க முடியாது"- சீமான் வெளிப்படை பேச்சு

இந்தி படித்தால் வடநாட்டில் வேலை செய்யலாம் என்ற கருத்து உள்ளநிலையில் வடநாட்டை சேர்ந்த பலர் இங்கு வந்துதான் பணிபுரிகிறார்கள் ஆதலால் இந்தியை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம் என திமுக துணை பொருளாளர் துரைமுருகன் கூட்டத்தில் பேசுகையில் கூறியுள்ளார்.

மேலும் ஜெயலலிதாவும், பன்னீர்செல்வமும் பேசிக்கொள்வது போல நடித்துக் காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைப் போல் கிழக்கு எது மேற்கு எதுன்னே தெரியல பிரதமர் கிட்ட போய் குனிஞ்சி நிமிராவே நேரம் சரியா இருக்கு என கூறி அதே போல் நடித்தும் காட்டியுள்ளார்.

 

 

சட்டசபை மட்டும் கூட்டட்டும் ஓ.பன்னீர் செல்வம் மீதும், எடப்பாடி பழனிச்சாமி மீதும் உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வருவதாக திமுக  துணை பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.